Petition against Arvind Kejriwal; Supreme Court action order

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் இருந்து வந்தார்.

Advertisment

இதனையடுத்து அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு எதிராக டெல்லி முதலமைச்சர் தொடர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1 வரை மட்டுமே இடைக்கால ஜாமீன் வழங்குவதற்கான உத்தரவை பிறப்பிப்பதாக தெரிவித்தது. அதே சமயம் ஜூன் 2 ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் சரணடைய உத்தரவிட்டது. மேலும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. முதலமைச்சராக அலுவல் பணிகளில் ஈடுபடக் கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து திகார் சிறையிலிருந்து வெளியே வந்த அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

Advertisment

Petition against Arvind Kejriwal; Supreme Court action order

இதற்கிடையே அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலை டெல்லி முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கக்கோரி உச்ச நீதிமன்றம் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (13.05.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்ய கோரிய மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை பதவியில் இருந்து நீக்கம் செய்ய கோரிய மனுவை ஏற்கனவே டெல்லி உயர்நீதிமன்றம் ரூ.50 ஆயிரம் அபராதத்துடன் தள்ளுபடி செய்த நிலையில் மேல்முறையீடு மனுவும் உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.