Advertisment

புதுக்கோட்டை அருகே பெரியார் சிலை உடைப்பு!

periyar

புதுக்கோட்டை அருகே மர்ம நபர்கள் சிலர் பெரியார் சிலையை சேதப்படுத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக, திரிபுராவில் இடதுசாரி புரட்சியாளர் லெனின் உருவச்சிலை இடித்தது தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, லெனின் யார்? அவருக்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு. கம்யூனிசத்திற்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு. இன்று திரிபூராவில் லெனின் சிலை. நாளை தமிழகத்தில் ஈ.வெ.ராமசாமி சிலை எனப் பதிவிட்டிருந்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், உடனடியாக பதிவை நீக்கினார். இதற்கு தமிழகத்தின் எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் அனைவரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

Advertisment

இதனிடையே, தமிழகத்தில் ஒரு சில இடங்களில் பெரியார் சிலைகளும் உடைக்கப்பட்டது. இதனையடுத்து பெரியார் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே நேற்று இரவு இந்த பெரியார் சிலையின் தலைப்பகுதியை மர்மநபர்கள் யாரோ சேதப்படுத்தியுள்ளனர். சிலையின் தலைப்பகுதி முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.

periyarstatue
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe