வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தின் நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்! காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் கோரிக்கை! 

Pay the outstanding amount of the Employment Guarantee Scheme! Congress MP, Manikkam Thakur demands!

இந்தியா முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை செயல்படுத்திவருகிறது மத்திய மோடி அரசு. இந்த திட்டத்தின்படி கிராமப்புற ஏழைகள் லட்சக்கணக்கானோர் பலனடைந்துவருகின்றனர். ஆனால், சமீப காலமாக இந்த திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு அவர்களுக்கான சம்பளத்தை தராமல் இழுத்தடித்துக்கொண்டே வருகிறது மத்திய அரசு. இதனால் பல மாநிலங்களில் சம்பளம் கிடைக்காமல் தொழிலாளர்கள் அவதியுறுகிறார்கள்.

இந்த நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் இந்த திட்டத்தில் உழைத்த ஏழைகளுக்கான சம்பளம் கடந்த 4 மாதங்களாக தரப்படவில்லை. இதன் நிலுவைத் தொகை மட்டுமே 49 கோடியே 6 லட்சத்து 44 ஆயிரத்து 465 ரூபாய். நான்கு மாதங்களாக சம்பளம் கிடைக்காததால் ஏழை மக்கள் அவதியுறுவதை அறிந்து, மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் அமைச்சர் கிரிராஜ் சிங்கிற்கு அவசர கடிதம் எழுதியிருக்கிறார் விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்.

அந்தக் கடித்தத்தில், “நிலுவையில் உள்ள தொகை முழுவதையும் ரிலீஸ் செய்து, ஏழை தொழிலாளிகளின் சம்பளப் பணம் கிடைக்க உடனடி நடவடிக்கை எடுத்து ஏழைகளின் கண்ணீரைத் துடைக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டிருக்கிறார் மாணிக்கம் தாகூர்.

congress
இதையும் படியுங்கள்
Subscribe