Skip to main content

நிர்வாகிகள் யாரும் ஒத்துழைக்க மறுக்கிறார்கள்... தங்கமணியிடம் கதறிய வேட்பாளர்...

Published on 01/04/2021 | Edited on 01/04/2021

 

ddd

 

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் தொடர்ந்து சூடுபிடித்து வரும் நிலையில், பல்வேறு தொகுதிகளில் வேட்பாளர்களுக்கு அவர்கள் சார்ந்து இருக்கக்கூடிய கட்சி உறுப்பினர்களும் நிர்வாகிகளும் ஒத்துழைப்பு தராமல் அவர்களுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர்.

 

கட்சி நிர்வாகிகள் செய்யும் இதுபோன்ற செயல்களால், திருச்சி துறையூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் இந்திராகாந்தி நேற்று (31.03.2021) முதல் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தை நிறுத்திவிட்டார்.

 

இதன் பின்னணி குறித்து விசாரித்ததில், நேற்று காலை தேர்தல் பிரச்சாரம் செய்யப்போவதாக புறப்பட்ட அவர், எந்த நிர்வாகியையும் தன்னுடன் அழைத்துச் செல்லாமல் அவர் மட்டும் தனியாக அமைச்சர் தங்கமணியை நேரில் சந்தித்து, தன்னுடைய தொகுதியில் இருக்கக்கூடிய அதிமுக நிர்வாகிகள் யாரும் ஒத்துழைப்பு தர மறுக்கிறார்கள். தொடர்ந்து எனக்கு எதிராக செயல்படுகிறார்கள். எனவே இந்தத் தொகுதியில் இந்தமுறை தோல்வி உறுதி என்று கூறிவிட்டு தேர்தல் பிரச்சாரத்தை நிறுத்திவிட்டார்.

 

இந்நிலையில், இன்று காலை அவருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர் சிகிச்சை பெற்று வரும் அவர் ஒருவார காலத்திற்குத் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் நிலை உருவானதால், துறையூரில் அதிமுகவுக்குப் பின்னடைவு ஏற்படும் என்று அக்கட்சியினரே கூறி வருகின்றனர். எதிர்க்கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் உற்சாகத்துடன் ஈடுபட்டுள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்