Advertisment

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்; குடியரசுத் தலைவர் இன்று உரை!

 Parliamentary Budget Session President speech today

Advertisment

இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று (31.01.2025) காலை தொடங்க உள்ளது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரான இந்த பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்க உள்ளது. இதற்காக நாடாளுமன்றத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவையின் கூட்டுக்கூட்டம் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையைத் தாக்கல் செய்ய உள்ளார். இதனையடுத்து நாளை (01.02.2025) மத்திய அரசின் 2025 - 2026ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.

கடந்த 2019ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 5 முறை முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன் கடந்த ஆண்டு (2024) நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற்றதால் பிப்ரவரியில் இடைக்கால பட்ஜெட்டை (6வது முறை) தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மக்களவைத் தேர்தலையடுத்து கடந்த ஜூலை மாதம் முழு பட்ஜெட்டை (7வது முறை) தாக்கல் செய்தார். இதன் மூலம் 8வது முறையாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்ய உள்ளார்.

இந்த கூட்டத்தொடரின் போது விலைவாசி உயர்வு, ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான விவகாரம், வக்பு சட்டத்திருத்த மசோதா உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு பிப்ரவரி 13ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆம் அமர்வு மார்ச் 10ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 4ஆம் தேதி நிறைவடைய உள்ளது. முன்னதாக டு டெல்லியில் நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Parliament President
இதையும் படியுங்கள்
Subscribe