Advertisment

சென்னையில் சைதைதுரைசாமிக்கு சொந்தமான கட்டிடம் இடிந்து விபத்து - 25 பேர் மீட்பு

bu

Advertisment

சென்னை கந்தன்சாவடி எம்.ஜி.ஆர் சாலையில் தந்தி டிவிக்கு எதிரே கட்டப்பட்டு வந்த முன்னாள் மேயர் சைதை துரைசாமிக்கு சொந்தமான 10மாடி கட்டிட மருத்துவமனையின் கட்டுமானம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் தொழிலாளர்கள் பலர் சிக்கினர். 25 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். படுகாயமடைந்த 3 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மீட்பு பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

பாரம் தாங்காமல் சிமெண்ட் கலவை மற்றும் இரும்பு பொருட்களுடன் கட்டிட சாரம் இடிந்து விழுந்தது. மேலும் நான்கு மாடி கட்டிடத்தின் தூண் இடிந்து விழுந்தது. தொழிலாளர்கள் தங்கியிருந்த பகுதியில் இந்த விபத்து நடந்ததால் பலர் சிக்கினர். இடுபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

chennai building accident saithai duraisamy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe