ops budget

2018 - 19ம் நிதியாண்டுக்கான, தமிழக பட்ஜெட், இன்று காலை 10.30 மணிக்கு பட்ஜெட் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

Advertisment

தமிழக அரசின் நிதித்துறை அமைச்சர் பொறுப்பு வகிக்கும் ஓ.பன்னீர்செல்வம் காலை 10.30 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்யும் 8-வது பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

பட்ஜெட் உரையை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாசித்து முடிந்ததும் இன்றைய சட்டசபை அலுவல் நிறைவுக்கு வரும். பின்னர் சபாநாயகர் ப.தனபால் தலைமையில் அவரது அறையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில், சட்டசபை கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது, பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் துறைரீதியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும் நாட்கள் உள்ளிட்ட பல்வேறு அலுவல்கள் பற்றி முடிவு செய்யப்படும்.