திமுக தலைவர் கலைஞரை நேரில் பார்த்தேன், அவர் நன்றான இருக்கிறார் என துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கலைஞரை நலம் விசாரிக்க சென்னை கோபாலபுரம் இல்லத்துக்கு துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி உள்ளிட்டவர்கள் வருகை தந்ததனர். கலைஞரை சந்தித்து நலம் விசாரித்து விட்டு வெளியே வந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்,
திமுக தலைவர் கலைஞரை நேரில் பார்த்தேன், அவர் நன்றான இருக்கிறார். அவர் உடல்நலம் குறித்து கேட்டறிந்தேன் என அவர் கூறினார்.