முதல்வர் பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்தது பற்றி விளக்கம் தருமாறு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்பட 11 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பினார் சட்டப்பேரவை சபாநாயகர் தனபால்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி திமுக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் சபாநாயகர் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும், இது தொடர்பாக சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று கூறி வழக்கை முடித்து வைத்தது.
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று கூட உள்ள நிலையில் சபாநாயகர் 11 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.