Skip to main content

எதிர்கட்சிகள் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம்!

Published on 25/05/2018 | Edited on 25/05/2018
tuty


தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.

 

 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 22ஆம் தேதி போராட்டம் நடைப்பெற்றது. அப்போது ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில், போராட்டக்காரர்களுக்கு காவல்துறையினருடன் மோதல் ஏற்பட்டதன் காரணமாக கல் வீச்சு, கண்ணீர் புகை, தடியடி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டன. அதில் போராட்டக்காரர்கள் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அறவழியில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் பங்கேற்கின்றனர். இதனிடையே முழு அடைப்புக்கு ஆதரவாக சென்னையில் காலை ஆறு மணி முதல் மாலை ஆறு வரை ஆட்டோக்கள் ஓடாது என்று சிஐடியு தெரிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்