மக்கள் தொகை கணக்கெடுப்பு- அரசிதழில் வெளியீடு!

2021- ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கான விவரங்களை அரசிதழில் வெளியிட்டது தமிழக அரசு. முதற்கட்டமாக வீடுகளை கணக்கிடும் பணிக்கான விவரங்கள் தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி ஏப்ரல் 1- ஆம் தேதி முதல் செப்டம்பர்- 30 ஆம் தேதி வரை வீடுகளை கணக்கெடுக்கும் பணி நடைபெறவிருக்கிறது. வீடுகள் கணக்கெடுப்பு பணியின் போது 31 கேள்விகள் கேட்கப்படவிருப்பதாக அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதில் குடிநீர், கழிவறை, தொலைக்காட்சி, கணினி, செல்போன், இரு சக்கர வாகனம், கார்,இண்டர்நெட் வசதி உள்ளிட்ட தகவல்கள் சேகரிப்படவுள்ளது.

npr tn govt released gazette

ஆந்திரா, மேற்கு வங்கம், கேரளா உள்பட பல்வேறு மாநில அரசுகளும் என்பிஆர் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி உள்ள நிலையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த அறிவிப்பை தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.இதனால் எதிர்க்கட்சிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

gazette notification npr tn govt
இதையும் படியுங்கள்
Subscribe