Advertisment

பிறந்தநாளை கொண்டாடும் மனநிலையில் இல்லை... மு.க.ஸ்டாலின்...

மார்ச் 1ஆம் நாளான தனது பிறந்த நாளை கொண்டாடும் மனநிலையில் இல்லை என்றும், அன்றைய தினம் தன்னை யாரும் நேரில் சந்தித்து வாழ்த்து சொல்ல வரவேண்டாம் என்றும் தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisment

mk stalin

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழினத்தின் நிரந்தப் பேராசிரியரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எனது பெரியப்பாவுமான பேராசிரியர் அவர்கள் வயது முதிர்வின் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

முக்கால் நூற்றாண்டு காலம், இந்த இனத்துக்கும் மொழிக்கும், தமிழ்நாட்டுக்கும் திராவிட இயக்கத்துக்கும் பெருந்தொண்டாற்றிய பேராசிரியப் பெருமகனார் உடல்நலிவுற்றிருக்கும் இந்த சூழலில் மார்ச் 1ஆம் நோள், நான் எனது பிறந்த நாளை கொண்டாடும் மனநிலையில் இல்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

எனவே திமுக முன்னணியினர், நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் என் மீது அன்பு கொண்ட நண்பர்கள் யாரும் மார்ச் 1 அன்று என்னை நேரில் சந்தித்து வாழ்த்துச் சொல்ல வரவேண்டாம் என பணிவன்புடன் வேண்டுகிறேன்.

தமிழர் நலன்காக்க தன்னை ஒப்படைத்துக்கொண்ட பேராசிரியப் பெருமகனார் நலம் பெற அனைவரும் தங்களது உள்ளார்ந்த நல்லெண்ணத்தை வெளிப்படுத்திக் கொள்வோம். இவ்வாறு கூறியுள்ளார்.

stalin birthday K. Anbazhagan mk stalin
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe