அரசியல் கட்சி துவங்கி சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதில் உறுதியாக இருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். புதிய படங்களில் நடிக்க தொடர்ந்து அவர் கால்சீட் கொடுத்துவரும் நிலையிலும், அரசியல் தொடர்பான டேட்டாக்களை சேகரித்தபடிதான் இருக்கிறார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rajini 76.jpg)
உள்ளூரில் இருந்தாலும் வெளியூரில் இருந்தாலும் தமிழக அரசியலிலும் தேசிய அரசியலிலும் என்ன நடக்கிறது என்பதை கேட்டறிந்து கொள்ளும் ரஜினி, ஜூன் மாதத்தில் அரசியல் கட்சி துவங்குவது குறித்த அறிவிப்பை வெளியிட திட்டமிட்டிருந்தார். அந்த அறிவிப்பை தற்போது அக்டோபர் மாதத்திற்கு தள்ளிப்போட்டுள்ளார் ரஜினி.
இதுகுறித்து நம்மிடம் பேசும் அவரது குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள், ‘’ எடப்பாடி அரசுக்கு எந்தவிதத்திலும் தொந்தரவு கொடுக்க டெல்லி விரும்பவில்லை. அதனால் அந்த அரசு 2021 மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடக்கும் வரை நீடிக்கும். அதனால், சட்டமன்ற தேர்தலுக்கு 6 மாதத்திற்கு முன்பு கட்சி ஆரம்பிப்பதுதான் சரியாக இருக்கும் என அவருக்கு நெருக்கமான அரசியல் வி.ஐ.ஐ.பிக்கள் சொல்லியிருக்கிறார்கள். அதனால் அக்டோபரில் கட்சி ஆரம்பித்தால் சரியாக இருக்குமா ? என தனது அரசியல் நலன் விரும்பிகளிடம் ஆலோசனை கேட்டு வருகிறார். அந்த வகையில், ரஜினி அரசியல் கட்சி தொடங்குவது அக்டோபருக்கு தள்ளிப்போகிறது ‘’ என்கிறார்கள்.
Follow Us