சென்னையில் பல்வேறு பகுதிகளில் பணிபுரிந்து வந்த வடமாநிலத் தொழிலாளர்கள் கரோனா பாதிப்பால் தங்கள் சொந்த மாநிலங்களுக்குச் சென்று கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இன்று மதியம் பீகார் மாநிலத் தொழிலாளர்கள் பெரியமேட்டில் குவிந்தனர்.

Advertisment

ஓரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் அப்பகுதி பரபரப்பாகக் காணப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் அவர்களிடம் விசாரித்தபோது, அவர்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல வந்ததாகவும், ஆனால் யாரிடமும் ரயில் முன்பதிவிற்கான டிக்கெட் இல்லையெனவும் கூறினர்.

Advertisment

இதனால் அவர்கள் அனைவரும் பெரியமேடு கண்ணப்பன் திடல் மாநகராட்சி சமூக நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சென்னையிலிருந்து முன்பதிவு செய்து செல்லும் பயணிகளுடன் கொஞ்சம் கொஞ்சமாக அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.