Advertisment

தர்காவில் நிர்மலாதேவி தலைவிரி தாண்டவம்! -அலறும் அருப்புக்கோட்டை!

ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்திலிருந்து வெளியேற மறுத்து, ‘காமாட்சி அம்மன்’ தனக்குள் இறங்கியிருப்பதாகக் கூறி, கண்களை மூடி தியானிப்பதுபோல் ஏதேதோ செய்து, தன்னை மாட்டிவிட்ட கல்லூரி மாணவிகள் இறந்துவிட்டார்கள் என்றெல்லாம் பொய் பேசி, உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டதுபோல் நடந்துகொண்டார் நிர்மலாதேவி. அதனைத் தொடர்ந்து, தான் வந்த டாக்சியில் அருப்புக்கோட்டை சென்றுவிட்ட அவரிடம், வழக்கறிஞர் ஒருவர் “உன் கணவரிடம் பேசு..” என்று தன்னுடைய மொபைலைக் கொடுத்திருக்கிறார்.

Advertisment

n

அந்த செல்போனைக் கையில் வாங்கிய நிர்மலாதேவி, இரண்டு தடவை தரையில் அடித்ததால், ‘டெம்பர் கிளாஸ்’ உடைந்துவிட்டது. அதனைத் தொடர்ந்து, மொபைல் கடையில் தரையில் அமர்ந்து, கோர்ட்டில் நடந்துகொண்டது போலவே கண்களை மூடி முனக ஆரம்பித்திருக்கிறார். அவரை அங்கிருந்து கிளப்புவதற்குள், அந்த மொபைல் கடை ஊழியர்கள் படாதபாடு பட்டனர். அதன்பிறகு, தான் ஓட்டிவந்த டூ வீலரை எடுக்காமல் அங்கேயே விட்டுவிட்டு, தன் இஷ்டத்துக்கு சாலையில் அங்குமிங்குமாக நடந்து போனார். தலை நிறைய மல்லிகைப்பூ வைத்துக்கொண்டு, சாலையில் கிடந்த காகிதங்களை அவர் பொறுக்கிட, மக்கள் அவரை பீதியுடன் பார்த்திருக்கின்றனர்.

Advertisment

i

இந்த விஷயங்களையெல்லாம் கேள்விப்பட்ட நிர்மலாதேவியின் கணவர் சரவணபாண்டி ‘விவகாரத்து வழக்கு தொடர்ந்துவிட்டதால், ரத்த சொந்தம் என்ற முறையில், அவரை மனநல மருத்துவமனையில் சேர்ப்பதற்குக் கையெழுத்துப் போடக்கூட முடியாத நிலையில் நான் இருக்கிறேன். யாராவது நிர்மலாதேவிக்கு உதவ முன்வந்தால், பணம்கூட செலவழிக்கத் தயாராக இருக்கிறேன்’ என்று தனக்கு நெருக்கமான ஒருவரிடம் பரிதவிப்புடன் கூறியிருக்கிறார்.

i

நிர்மலாதேவியோ அடுத்தகட்ட ரகளையாக, இரவு 9 மணியளவில், அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு தர்காவுக்குச் சென்று, தனக்கு பேய் பிடித்திருப்பதாகக் கூறி, மந்திரிக்க வேண்டும் என்று உறுமியிருக்கிறார். அங்கு தலைவிரி கோலமாகத் தலையைச் சுழற்றியபடியே அவர் முட்டிக்கொண்டிருக்க.. காவல்துறைக்குத் தகவல் போனது. பெண் காவலர்கள் இருவர் வந்து நிர்மலாதேவியை இழுத்துச் சென்றனர்.

இன்னும் என்னென்ன பண்ணப் போகிறாரோ நிர்மலாதேவி?

Nirmaladevi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe