Skip to main content

தற்கொலைக்கு முயன்ற முருகன் குடும்பம்! ஆறுதல் சொன்ன ஈவிகேஎஸ், முத்தரசன்

Published on 17/12/2018 | Edited on 17/12/2018
s


மாணவிகளை பாலியலுக்கு அழைத்த வழக்கில் நிர்மலாதேவியோடு குற்றஞ்சாட்டபட்ட உதவி பேராசிரியர் முருகன் ஆராய்ச்சி மாணவர் கருப்பச்சாமி ஆகியோர் கைது செய்யபட்டு 8 மாதங்கள் ஆனபின்பும் இன்றுவரை ஜாமீன் கொடுக்காத நிலையில் முருகனின் மனைவி மற்றும் குடும்பத்தினர் நமக்கு போன் செய்து,   ”நாங்க குடும்பத்தோட சாகப்போறோம் எங்களால் இந்த அதிகார வர்கத்தோடு மோத முடியவில்லை. அரசும் கவர்னரும் நல்லாவே இருக்கமாட்டார்கள். எங்களது சாபம் அவர்களை சும்மா விடாது”என்று போனை வைக்க நாம் அங்கு விரைந்தோம்.

 

அங்கு மிகுந்த விரக்தியில் இருந்த முருகனின் மனைவி சுஜாவோ,  ”அவரை நம்பிதான் குடும்பத்தின் ஐந்து உறுப்பினர்களும் இருக்கிறோம். இப்ப அவருக்கே இந்த நிலைமை. எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. வெளியே தலைகாட்ட முடியவில்லை . இப்போது நடப்பது எல்லாமே பொய்யா இருக்கு. அரசு மற்றும் நீதியும் நியாயத்தின் பக்கம் இல்லை என்பது வெட்டவெளிச்சமாக தெரிகிறது.

 

 சின்ன பிள்ளைக்கு கூட புரியும். நிர்மலாதேவி என் கணவர் முருகனுக்கும்,  ஆராய்ச்சி மாணவர் கருப்பச்சாமிக்குமா மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்திருப்பார்? பல்கலைகழகத்தின் கடைநிலை ஊழியர்களான இவர்களை திருப்திபடுத்தியா பணமும் புகழும் அடையமுடியும்.  அந்த மாணவிகளிடம் தனக்கும் கவர்னர் தாத்தாவுக்கும் உள்ள நெருக்கத்தையும் பல்கலைகழகத்தில் உயர் பதவிகளில் உள்ளவர்களை பற்றியுமே பேசியுள்ள போது எதற்காக என் கணவரை மட்டும் கைது செய்து ஒரு பொய்யான வாக்குமூலத்தை போலிஸே எழுதி அதை பத்திரிக்கைகளுக்கு கொடுக்கவேண்டும். கவர்னர் அவசர அவரமாக சந்தானம் கமிஷன் அமைக்க வேண்டும், நக்கீரன் ஆசிரியரையே கைது பண்ண அரசு தயாராவதும் நிர்மலாவே இது என் வாக்குமூலம் இல்லை என்று சொல்கிறார்.

என்ன நடக்கிறது என்றே புரியவில்லை.   இப்படியே இருவரை மட்டும் குற்றவாளியாக்கி சிறைக்குள் வைக்க திட்டம்போடுகிறார்கள். வெளியே விட்டால் பல உண்மைகளை நிர்மலாதேவி போட்டுடைத்துவிடுவார் என்று அவரிடம் யாரையுமே நெருங்க விடுவதில்லை.  என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.  ஒரே மர்மமாக இருக்கிறது என்று தேம்பி தேம்பி அழத்தொடங்க....

அருகில் இருந்த அவரது தந்தை ”ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மதுரைக்கு வருகிறார்.  நாங்கள் காங்கிரஸ் குடும்பம்.  அவரிடம் நியாயத்தை கேட்கவும் உண்மையில் என்னதான் நடந்தது.  ஏன் என் மருமகனை மட்டும் குறிவைக்கிறார்கள்.  எங்களுக்கு ஆதரவாக யாருமே இல்லையா என்ற கோபத்தில்தான் என் மகள் குடும்பத்தோடு சாகபோறோம் என்றாள்.  நான்தான் அனைவரையும் சமாதானபடுத்தி உங்களை அழைத்தேன் என்று அவரிடமும் பேசிவிட்டோம்.  அவர் வரசொன்னார் . அதுதான் மதுரை ஏர்போர்ட்டுக்கு போறோம் என்று சொல்ல,  நாமும் கிளம்பினோம் என்னதான் நடக்கிறது பார்க்க.....

 

e

 

அங்கு இவர்களுக்காகவே காத்திருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன்,  ”வாங்கம்மா நான் எல்லாத்தையுமே கேள்விபட்டேன்.  எனக்கும் உங்க ஆதங்கம் புரிகிறது. யாருக்காக நிர்மலாதேவி மாணவிகளுக்கு வலைவீசினாள் என்று அப்பட்டமாகவே தெரிகிறது. அந்த ஆடியோவிலேயே சொல்கிறார் ”கவர்னர் தாத்தா எவ்வளவு நெருக்கம் பார்த்தீங்களா என்று அதுபோதாதா?
இந்த விசயத்தில் கவர்னருக்கு ஏன் இவ்வளவு பதட்டம்” ஆடியோ ரிலீஸான அதே நாள் அவசர அவசரமாக பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்த காரணம் என்ன.  ”எங்கப்பன் புதருக்குள்ள இல்ல என்பது போல கவர்னர் இந்த விசயத்தில் அக்கரை எடுப்பதற்கான காரணம் வெட்டவெளிச்சமாக தெரிகிறது” 
இதை கட்டாயம் பொதுதளத்தில் கேள்விகள் வைப்பேன் மற்றும் கட்சியில் கலந்து ஆலோசிட்டு உங்களுக்கு உதவ முன்னிற்பேன்.  கவலைபடாமல் போங்க என்று ஆறுதல் சொல்ல.. அங்கிருந்து வெளியே வந்தவர்கள், கம்யூனிஸ்ட் கட்சி மாநில தலைவர் முத்தரசனை சந்தித்தனர்.

 

m

 

 முத்தரசன் அவர்களிடம்,   ‘’இதனால் எந்தவித தப்பான முடிவும் எடுத்துவிடாதீர்கள் தற்கொலை இதற்கு தீர்வாகாது. உண்மையை முழுவதும் மறைக்கமுடியாது யாருக்காக இவ்வளவு வேலையும் நடக்கிறது என்று எல்லோருக்கும் தெரியும்  மேகதாது பிரச்சனையில் கூட ஏன் ஜாமின் கொடுக்க இவ்வளவு தாமதபடுத்துகிறார்கள் என்று பேசியிருக்கிறேன்.,”தமிழக அரசு நியாயமான விசாரனையை நடத்தாது. அதிகாரம் மத்தியில் இருக்கிறது.  தமிழக அரசு ஒன்றும் செய்யாது. இதில் கவர்னரும் அவரின் உதவியாளர் ராஜகோபாலும் சம்மந்தபட்டிருக்கிறார்கள்.  

                                                                                                                                                                                                   இதை ஆணிதரமாக சொல்வேன்.  பயபடாமல் போங்க கம்யூனிஸ்ட் கட்சி நியாயத்தின் பக்கம் கட்டாயம் நிற்கும்.  நக்கீரன் இதை தொடர்ந்து செய்திவெளியிடுவதால்தான் எங்கே நம்ம குட்டு வெளியே தெரிந்துவிடுமே என்ற கோபத்தில்தான் நேரடியாக கவர்னரின் அதிகார அழுத்தத்தால்தான். எல்லோரும் சட்டம்124ன் படி கைது பண்ணமுடியாது என்று உயர் அதிகாரிகள் எவ்வளவோ சொல்லியும் அவரை கைது செய்து அசிங்கபட்டார் கவர்னர்.  சீக்கிரம் நிர்மலாதேவி விசயத்தில் பெரியமனிதர்களின் முகம் வெளியே வரும் காலம் நெருங்கி கொண்டிருக்கிறது’’ என்று ஆறுதல் கூறினார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“காவிரி நீர் வேணுமா... ஈரோட்டில் கூட காவிரி ஓடுது பாருங்க...” - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதிலால் எழுந்த விமர்சனம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'Oh Cauvery water...? Even in Erode, see the Cauvery running'- Criticism caused by EVKS Elangovan's response

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசுகையில், ''ஸ்டாலின் தலைமையில் அமைந்திருக்கின்ற கூட்டணி என்பது சாதி மதங்களைக் கடந்த கூட்டணி. மத வெறித்தனத்திற்கு அப்பாற்பட்ட கூட்டணி. மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும், எல்லா மதத்தைச் சார்ந்தவர்களும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற ஒரு நல்ல கொள்கைக்காக தான் இந்த கூட்டணி இருக்கிறது.

மற்ற கூட்டணிகளை எடுத்துக் கொண்டால் குறிப்பாக பாஜக கூட்டணியில் இருக்கின்ற கூட்டணியாக இருந்தாலும் சரி, அதிமுக தலைமையில் இருக்கின்ற கூட்டணியாக இருந்தாலும் சரி அவர்கள் கொள்கைக்காக ஒன்று சேரவில்லை. சில கோடி ரூபாய் பேரம் பேசி பெறுவதற்காக அந்த கூட்டணியில் இருக்கிறார்கள்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமாட்டேன் என்று சொல்கின்ற காங்கிரசுக்கு பத்து சீட்டுகள் கொடுத்தது நியாயமா என சீமான் கேள்வி எழுப்பி உள்ளாரே' எனக் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த இளங்கோவன், ''இல்லை காங்கிரசினுடைய கொள்கையே ஒரு சொட்டு நீர் கூட கொடுக்கக் கூடாது என்பதுதான். மக்கள் குடிப்பதால் கெட்டுப் போயிருக்கிறார்கள். மக்களுடைய சிந்தை மாறி போயிருக்கிறது. அதனால் காங்கிரசை பொறுத்தவரை எங்களுடைய மகாத்மா காந்தியினுடைய கொள்கையே ஒரு சொட்டு மது தண்ணீர் கூட மக்களுக்கு கொடுக்கக் கூடாது என்பதுதான்'' என்றார்.

உடனே செய்தியாளர் 'காவிரி தண்ணீர்' என சொல்ல, ''காவிரி தண்ணீரா... காவிரி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஈரோட்டில் இருக்கின்ற காவிரி ஆற்றை பார்த்தீர்கள் என்றால் கூட, இன்னைக்கு பாருங்கள் இருக்கின்ற பாறை எல்லாம் மறைக்கும் அளவிற்கு தண்ணீர் போய்க் கொண்டிருக்கிறது. வேண்டிய அளவிற்கு தண்ணீர் தர கர்நாடகா தயாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கின்ற காரணத்தால் சில தடங்கல்கள் இருக்கிறது'' என்றார்.

காவிரி நீர் குறித்த கேள்விக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கொடுத்த பதிலுக்கு சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

Next Story

“சிறையில் இருந்தபோதும் உள்ளம் கலங்காத கொள்கையாளர்” - முத்தரசன் இரங்கல்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Mutharasan condoles the demise of MP Ganesamoorthy

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு எம்.பியாக இருந்த மதிமுகவைச் சேர்ந்த கணேசமூர்த்தி, கடந்த ஞாயிற்றுக்கிழமை பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது இழப்புக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், “மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரும், ஈரோடு மாவட்ட மூத்த அரசியல் முன்னோடியுமான அ. கணேச மூர்த்தி எம்.பி. (77) இன்று (28.03.2024) அதிகாலை கோவை மருத்துவமனையில் காலமானார் என்று துயரச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. ஈரோடு அருகில் உள்ள அவல் பூந்துறை, கவுண்டிச்சிபாளையம் என்ற ஊரில் செல்வாக்கு பெற்ற விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். பெருந்துறை அரசு உயர்நிலைப் பள்ளியில் படிப்பை முடித்து சென்னையில் உயர் கல்வி பெற்றவர்.

கல்லூரி கல்வி பயின்ற காலத்தில் தமிழ் மொழி பற்று, தேசிய இனங்கள், தமிழர் தனித்துவ பண்புகள் குறித்த அறிஞர் அண்ணாவின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு தி.மு.கழக மாணவர் இயக்கத்தில் இணைந்து செயல்படத் தொடங்கியவர். தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய தளகர்த்தர்களில் ஒருவராக உயர்ந்தார். கடந்த 1977 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதி தி.மு.கழக வேட்பாளராகத் தேர்தல் களம் இறங்கியவர். முதல் மூன்று முறை தொடர்ந்து தோல்வி அடைந்த போதும் கொள்கையில் நிலைகுலையாமல் பயணித்தவர்.

1977 முதல் 1992 வரையான காலங்களில் திராவிட முன்னேற்றக் கழகம் சந்தித்த நெருக்கடிகளை முன்னின்று எதிர் கொண்டவர். 1980களின் ஆரம்பத்தில் திமுக மாநில சிறப்பு மாநாடு நடத்தி தலைவர் கலைஞரிடம் 33 லட்சத்து 33 ஆயிரத்து 333 ரூபாய் நிதி வழங்கிய பெருமைக்குரியவர். கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்களின் பேராதரவு பெற்று  தி.மு.கழகத்தின் ஈரோடு மாவட்டச் செயலாளர் பொறுப்பை ஏற்று சிறப்பாக செயல்பட்டவர். 1989 மொடக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு பெற்றார்.

கட்சியில் ஏற்பட்ட நெருக்கடியைத் தொடர்ந்து வைகோவுடன் இணைந்து மறுமலர்ச்சி தி.மு.கழகம் உருவாக்கியவர்களில் அ. கணேசமூர்த்தி குறிப்பிடத்தக்கவர். பொடா சட்டத்தின் கீழ் 19 மாதம் சிறையில் இருந்தபோதும் உள்ளம் கலங்காத கொள்கையாளர். பழனி மக்களவைத் தொகுதியில் இருந்து இருமுறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். தற்போது ஈரோடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகச் செயல்பட்டு வந்தவர். கட்சியின் உயர் பொறுப்புகளிலும் பணியாற்றியவர். உயர்ந்த பண்புகளின் அடையாளமாக வாழ்ந்து காட்டிய அ. கணேசமூர்த்தியின் மறைவு எளிதில் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. பொதுவாழ்வு பணிகளை ஒருங்கிணைக்கும் தலைமை பண்புமிக்க ஒருவரை ஈரோடு மாவட்டம் பறிகொடுத்து விட்டது.

அ. கணேசமூர்த்தியின் வாழ்விணையர் சில வருடங்களுக்கு முன்பு காலமாகிவிட்டார். இவர்களுக்கு கபிலன் என்ற மகனும் தமிழ் பிரியா என்கிற மகளும் பேரக் குழந்தைகளும் இருக்கிறார்கள். அ. கணேசேமூர்த்தியின் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. அன்னாரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், மதிமுக தலைவர் வைகோ உள்ளிட்ட நண்பர்களுக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.