Advertisment

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!

 NIA officials raided the homes of Naam Tamil Party officials

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

Advertisment

சென்னை, திருநெல்வேலி, மதுரை, சிவகங்கை, கோவை, தென்காசி, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பிற நாட்டில் தடை செய்யப்பட்ட அமைப்பினர் ஊடுருவல் செய்தனரா எனவும், வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்றனரா என்ற சந்தேகத்திலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

இந்த சோதனையின் மூலம் என்ஐஏ அதிகாரிகள் தங்களுக்குத்தேவையான ஆவணங்களை திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் திருச்சி சண்முகா நகரில் உள்ள நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

NIA raid
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe