Tirunelveli

Advertisment

அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து வரும் 7ஆம் தேதி அறிவிப்பு வெளியாகும் என்று கடந்த மாதம் நடந்த செயற்குழுவிற்குபின்னர் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்குபின்னர் யார் முதல்வர் வேட்பாளர் என்ற விவாதம் அதிமுகவிலும் பொதுவெளியிலும் நடந்து வருகிறது.

ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகிய இருவருமே தங்களுக்கான ஆதரவை திரட்டி வருகிறார்கள் என்று செய்திகள் வெளியாகி உள்ள நிலையில் நெல்லையில் எடப்பாடி பழனிசாமி 2021ல் மீண்டும் முதலமைச்சராக தமிழகமே எதிர்பார்க்கின்றது என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

இந்த போஸ்டர்கள் செய்தி சமூக வலைதளங்களில் பரவி கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.