உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இயற்கை விவசாயி நெல் ஜெயராமன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வதந்திகள் பரப்பப்பட்டன. இந்த வதந்திகளை யாரும் நம்பவேண்டாம் என காவிரி விவசாய சங்க தலைவர் பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.