ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் பகுதியைச் சேர்ந்த மாணவி சந்தியா, நீட் தேர்வு எழுவதற்காக மதுரை வந்துள்ளார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="2374301885" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் தேர்வு எழுதிவிட்டு, பேருந்தில் ஊர் திரும்பியுள்ளார். திருப்புவனம் அருகே பேருந்து சென்றபோது, மாணவி சந்தியா மயங்கி விழுந்துவிட்டார். உடனே அவரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சந்தியா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="2439263953" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
தற்போது அந்த மாணவியின் தந்தை சிவகங்கை, திருபுவனம் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், இந்த மரணம் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்கு பதியப்பட்டுள்ளது. மதுரை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடந்துகொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.