Advertisment

கப்பலில் வண்ண விளக்குகள் ஒளிர விட்டு டாக்டர்கள், நர்சுகளுக்கு நன்றி தெரிவித்த கடற்படை (படங்கள்)

கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப்பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், போலீசார் ஆகியோர் ‘கரோனா போர் வீரர்களாக’ அழைக்கப்படுகின்றனர். நாம் பாதுகாப்பாக இருப்பதற்காக அவர்கள் கடுமையாக உழைக்கின்றனர்.

Advertisment

அவர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் இன்று இந்திய விமானப்படை போர் விமானங்கள் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையும், திப்ருகார் முதல் கட்ச் வரையும் பறந்து சென்று கரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் மீது மலர்களை தூவும் என்று முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

Advertisment

அதன்படி இன்று நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள் மீது விமானப்படை விமானங்கள் மூலம் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. சென்னை ராஜூவ் காந்தி மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, ஓமந்தூரார் மருத்துவமனை, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் ஞாயிற்றுக்கிழமை காலை மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது.

http://onelink.to/nknapp

அன்று இரவு சென்னை கலங்கரைவிளக்கம் அருகே உள்ள கடல் பகுதியில் கடற்படையின் கப்பல்கள் மின் விளக்குகளை ஒளிரச் செய்தும், சைரன்களை ஒலித்தும் டாக்டர்கள், நர்சுகளுக்கு நன்றி செலுத்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

chennai marina beach thanks Doctors indian navy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe