“எம்.ஜி.ஆர். திட்டங்கள் ஏழைகளின் வாழ்வில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்தன..” தமிழில் ட்விட் செய்த மோடி! 

Narendra Modi Tweet for MGR Birthday

நடிகரும், அதிமுகவின் நிறுவனரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் 105வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இன்று தமிழ்நாடு அரசு சார்பில், எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்படும் என அறிவித்துள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, எம்.ஜி.ஆர். பிறந்தநாளை முன்னிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில், “பாரத ரத்னா எம்.ஜி.ஆரை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன். சமூகநீதி, அதிகாரமளித்தல் ஆகியவற்றில் முதன்மையான சிறந்த தலைவராக அவர் பரவலாகப் போற்றப்படுகிறார். அவரது திட்டங்கள் ஏழைகளின் வாழ்வில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்தன. அவரது திரையுலக பெருந்திறனும் அனைவராலும் போற்றப்படுகிறது” என்று தமிழில் பதிவிட்டுள்ளார்.

admk
இதையும் படியுங்கள்
Subscribe