narendra modi parliament speech

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

நாடாளுமன்ற மக்களவையின் நிறைவு நாளான இன்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

Advertisment

உலக அளவில் இந்திய பொருளாதாரம் 6வது இடத்தில் உள்ளது. சர்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது. எனது அரசாங்கம் 100 சதவீதத்துக்கும் அதிகமாக நாட்டுக்காக உழைத்தள்ளது. நாடு முழுவதும் மக்கள் என் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அண்டை நாடுகளுக்கு மனிதாபிமான உதவிகளை செய்வதில் எடுத்துக்காட்டாக உள்ளோம்.

Advertisment

16வது மக்களவையில் 44 புதிய பெண் எம்பிக்கள் இடம் பெற்றனர். பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்களாக இரண்டு பெண்கள் இருந்தது பெருமையாக உள்ளது. 5 ஆண்டுகளில் 219 மசோதாக்களில் 203 மசோதாக்கல் மக்களவையில் நிறைவேற்றப்பட்டன. ஐந்து ஆண்டுகளில் மற்ற நாடுகளுக்கு உதவும வகையில் இந்தியா முன்னேறியுள்ளது.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

பாஜக அரசு நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் 100 சதவீதத்திற்கும் அதிகமான உழைத்திருக்கிறது. கருப்புப் பணம் மற்றும் ஊழலுக்கு எதிராக கடும் சட்டங்களை இயற்றினோம். கருப்பு பணம், ஊழலை ஒழிக்க பாஜக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பு சட்டத்தை நள்ளிரவில் நிறைவேற்றினோம். ஆதார் அட்டையை அமல்படுத்தியதில் உலகையே இந்தியாவை திரும்பி பார்க்க வைத்தோம்.

ஓராண்டுக்குள் அதிக செயற்கைக்கோள்களை இந்தியா விண்ணுக்கு அனுப்பியுள்ளது. ஏழை மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டோம். இந்தியாவின் யோக கலையை உலகமே அங்கீகரித்துள்ளது. 30 ஆண்டுகளுக்கு பின் எனது தலைமையில்தான் ஸ்திரமான ஆட்சி நடந்துள்ளது. நாட்டு மக்களுக்கு அவசியமற்ற 1400 சட்டங்களை நீக்கியுள்ளோம். பாஜக ஆட்சியை நான் புகழவில்லை. நாங்கள் செய்த பணிகளை சிந்தியுங்கள். இவ்வாறு பேசினார்.