நக்கீரன் ஆசிரியரை சந்திக்க விடாததால் தர்ணா போராட்டம் செய்த வைகோ கைது

vvvvo

நக்கீரன் ஆசிரியர் நக்கீரன் கோபால் இன்று காலையில் கிண்டி ஆளுநர் மாளிகையிலிருந்து வந்த புகாரின் பேரில் சென்னை விமான நிலையத்திலிருந்து புனே செல்லவிருந்தபோது போலீசாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவர் சென்னை

சிந்தாதிரிப்பேட்டை காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளார்.

இதைக்கேள்விப்பட்டதும் நக்கீரன் ஆசிரியரை நேரில் சந்திக்க சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையம் சென்றார் வைகோ. விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. அதனால் அவரை சந்திக்க அனுமதி தர முடியாது என்று போலீசார் அவரை உள்ளே விடாமல் தடுத்தனர்.

இதனால் போலீசாரிடம் கடும் வாக்குவாதம் செய்தார் வைகோ. தொடர்ந்து வைகோவை நக்கீரன் ஆசிரியரை சந்திக்க விடாமல் போலீசார் தடுத்ததால் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம் செய்தார். அவருடன் நக்கீரன் பத்திரிகையளர்களும் சாலையில் அமர்ந்து

தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட வைகோவை போலீசார் கைது செய்து காவல் வாகனத்தில் அழைத்துச்சென்றனர். அவர் திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்து அழைத்துச்செல்லப்பட்டபோது, ‘’நக்கீரன்கோபாலை சந்தித்த என்னை அனுமதிக்க மறுத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்’’என்று தெரிவித்தார். கைதின்போது, போலீசுக்கு எதிராகவும், ஆட்சியாளர்களுக்கு எதிராகவும் வைகோ கண்டன

முழக்கம் செய்தார்.

stalin vaiko
இதையும் படியுங்கள்
Subscribe