Skip to main content

’கருப்பு குழந்தைக்கு 3 லட்சம் ரேட்! கலர் குழந்தைக்கு 4 லட்சம் ரேட்!குழந்தை உங்களுக்கே பிறந்தது மாதிரி சான்றிதழ் வாங்கித்தந்துருவேன்’-அதிரவைக்கும் அமுதா ஆடியோ

Published on 25/04/2019 | Edited on 25/04/2019


நாமக்கல் அருகே ராசிபுரத்தில் கடந்த 30 ஆண்டுகளாக பணத்திற்காக குழந்தைகளை விற்பதாக ஓய்வுபெற்ற செவிலியர் அமுதாவின் ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   இது தொடர்பாக எழுந்த புகாரில்  விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியருக்குக் சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் உத்தரவிட்டுள்ளார்.  

 

a

 

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த குழந்தை பாக்கியம் இல்லாத ஒருவரிடம் நாமக்கல் அருகே ராசிபுரத்தில் உள்ள ஓய்வு பெற்ற செவிலியர் பேசிய ஆடியோ வாட்ஸ்-அப்பில் வெளியாகியுள்ளது.

 

 

அந்த ஆடியோவில் செவிலியர் அமுதா,  ‘’குழந்தை இல்லாம கஷ்டப்படுறவங்களுக்கு எடுத்து தர்றேன்(குழந்தையை வாங்கித்தருகிறேன்). இதனால் செவிலியர் வேலையில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றுள்ளேன் 30 வருஷமா இப்படி செய்துக்கிட்டு வர்றேன். ஆண்டவன் புண்ணியத்துல இதுவரைக்கும் எந்த பிரச்சனையும் வந்தது இல்லை.   அப்பா- அம்மாவை பார்த்துதான் குழந்தையை எடுப்பேன்.  குழந்தை எடுக்கும்போது அவங்ககிட்ட கையெழுத்து வாங்கிப்பேன்.  அதெல்லாம் முறைப்படி செய்து கொடுத்துவிடுவேன்.  வெளியில கோர்ட் மூலமாக போனா லேட்டாகும்.  இப்போதைக்கு எடுத்து தர முடியாது.  

 

குழந்தை கொழு கொழுன்னு ஆரோக்கியமாக இருக்குற மாதிரி எடுத்து தர்றேன்.   கருப்பு குழந்தையாக இருந்தால் 3.3 லட்சம் ரேட்.  குழந்தை கலரா இருந்தா 4.25 லட்சம் ரேட்.  

 

 மேற்கொண்டு, 70 ஆயிரம் கொடுத்தால்   ஒரிஜினிலா குழந்தை உங்களுக்கு பிறந்தது மாதிரி நகராட்சியில் சான்றிதழ் வாங்கித்தந்துருவேன்.  ஒரு மாசத்துல ராசிபுரம் நகராட்சியிலேயே வாங்கித்தந்துருவேன்.  ராசிபுரத்தில் பிரசவம் ஆனமாதிரியும்,  பெண்ணுக்கு ஆபரேஷன் மூலம்  குழந்தை பிறந்தது மாதிரியும், எங்க வீட்டில் தங்கியிந்து குழந்தை பெற்றது மாதிரியும் சான்றிதழ் வாங்கித்தந்துருவேன்’’என்று தெரிவித்துள்ளார்.  

 

இந்த ஆடியோ வாட்ஸ் -அப்பில் வெளியாகி தமிழகமெங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

 

அமுதாவின் ஆடியோவினால் எழுந்த புகாரில் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியருக்குக் சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் உத்தரவிட்டுள்ளார்.  


 

சார்ந்த செய்திகள்

Next Story

ராசிபுரம் குழந்தை விற்பனை!!! 11 பேருக்கு காவல் நீட்டிப்பு...

Published on 06/06/2019 | Edited on 06/06/2019
rasipuram child kidnap


நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த, ஓய்வுபெற்ற செவிலியர் உதவியாளரான (எப்என்ஏ) அமுதவல்லி, கொல்லிமலை, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் குழந்தைகளை வாங்கி, குழந்தையில்லா தம்பதிகளிடம் சட்ட விரோதமாக விற்பனை செய்ததாக வாட்ஸ் ஆப் ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை கிளப்ப, குழந்தை விற்பனை வழக்கில் செவிலியர் அமுதவல்லி உட்பட 11 பேரை கைது செய்தனர்.

இன்று அவர்கள் நாமக்கல் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், அந்த 11 பேருக்கும் ஜூன் 20 வரை காவலை நீட்டித்து உத்தரவிட்டது.