Advertisment

தொடங்கியது மேட்ச்... பறந்தது ஷூ... பதறியது மைதானம் - ஸ்டேடியத்துக்குள் நாம் தமிழர்!

சென்னையில் நடைப்பெற்று வரும் ஐபிஎல் போட்டியில் மைதானத்தில் நாம் தமிழர் கட்சி்யினர் காலணி மற்றும் கொடிகளை வீசியதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதனால் பதற்றம் ஏற்பட்டது. உடனே போலீசார் அவர்களை கைது செய்து பதற்றத்தை குறைத்தனர்.

Advertisment

IPL chennai 1

IPL chennai 2

Advertisment

IPL chennai 34

IPL chennai 4

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து தமிழகத்தில் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில் சென்னையில் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் போராட்டத்திற்கு எதிராக பல்வேறு தரப்பினரும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தடியடி - கைது நடவடிக்கையினால் மூன்று மணி நேரத்திற்கு பின்னர் போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்தது போலீஸ். இதையத்து அதிக அளவில் ரசிகர்கள் இல்லாமலேயே கிரிக்கெட் ஆட்டம் தொடங்கியது. மைதானத்திற்குள்ளும் போராட்டக்காரர்கள் சென்றுள்ளனர்.

கிரிக்கெட் ஆட்டத்தின் போது மைதானத்தில் காலணி மற்றும் கொடிகளை வீசினர். மைதானத்தில் நாம் தமிழர் கட்சியின் கொடியை காட்டி முழக்கங்கள் எழுப்பினர். இதனால் சிறிது நேரம் ஆட்டம் நிறுத்தப்பட்டது.இதையடுத்து சேப்பாக்கம் மைதானத்திற்குள் பதற்றம் ஏற்பட்டது. உடனடியாக, காலணி மற்றும் கொடிகளை வீசியதாக நாம் தமிழர் கட்சியினர் 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும், கிரிக்கெட் மைதானத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கருப்பு கொடி காட்டியதாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவரை கைது செய்தனர் போலீசார்.

IPL karnataka tamil nadu kaveri issue sterlite protest
இதையும் படியுங்கள்
Subscribe