Madras-High-Court

கிண்டி ஆளுநர் மாளிகையிலிருந்து வந்த புகாரின் பேரில் சென்னை விமான நிலையத்தில் நக்கீரன் ஆசிரியரை ஒருமணி நேர விசாரணைக்குப் பிறகு போலீஸார் கடந்த 09.10.2018 செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். பின்னர் எழும்பூர் கோர்ட், இந்த வழக்கில் நக்கீரன் ஆசிரியரை கைது செய்வதற்கு போதிய ஆவணங்களும், ஆதாரங்களும் சமர்பிக்கப்படவில்லை என்றும், இந்திய தண்டனைச் சட்டம் 124 இதற்கு பொருந்தாது என்றும் நக்கீரன் ஆசிரியரை கைது செய்ய மறுத்து உத்தரவிட்டது அனைவரும் அறிந்ததே.

Advertisment

அந்த வழக்கில் ஆசிரியருடன் சேர்க்கப்பட்டிருந்த நக்கீரன் ஊழியர்கள் 34 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

Advertisment

அந்த வழக்கு இன்று நீதிபதி தண்டபாணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, இதுதொடர்பாக நீண்ட விவரமான பதில் மனு தாக்கல் செய்ய தங்களுக்கு காலஅவகாசம் தேவைப்படுகிறது என்றும், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் வந்து வாதிட வேண்டியிருப்பதாலும் வழக்கை வேறு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வழக்கில் நக்கீரன் ஊழியர்கள் 34 பேர் மீதும் எந்த மேல்நடவடிக்கையும் மேற்கொள்ளமாட்டோம் என்று அரசு தரப்பில் உத்திரவாதம் அளித்ததையடுத்து, வழக்கு வரும் 25ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Advertisment

அரசு தரப்பு வழக்கறிஞராக ஐயப்பராஜ் ஆஜரானார். நக்கீரன் ஊழியர்கள் தரப்பில் பி.டி.பெருமாள், இளங்கோவன், சிவக்குமார் ஆகியோர் ஆஜரானார்கள்.