Skip to main content

கஜா புயலை எதிர்கொள்ள நாகை மாவட்டம் தயாரா? -ஒரு ரவுண்டப் 

Published on 15/11/2018 | Edited on 15/11/2018

 

ng


வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலம் புயலாகமாறி தமிழகத்தை பெரும் பீதிக்கு உள்ளாக்கி உள்ளது.  அப்படி உருவாகியிருக்கும் புயலுக்கு கஜா என்றும் பெயர் வைத்துள்ளனர். 

 

அந்த புயலானது கடலூர் மற்றும் பாம்பனுக்கு இடையே உள்ள பகுதியில் கரையைக் கடக்கலாம் என வானிலை ஆய்வு மையம் கூறி வருகிறது. இந்த நிலையில் இன்று மாலை 5 மணிக்கு புயல் கறையை கடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

n

 

எப்போதும் மழையோ, புயலோ, வறட்சியோ எதுவந்தாலும் முதலில் பாதிக்கப்படுவது நாகை மாவட்டம் தான். அங்கு பாதுகாப்பு நிலவரம் எப்படி என்று ஒரு ரவுண்டப் செய்தி.

நான்காவது நாளாக நாகை மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை;

கஜா புயல் எச்சரிக்கை காரணமாக நாகை மற்றும் காரைக்கால் மாவட்டங்களை சேர்ந்த 64 கிராம மீனவர்கள் இன்று நான்காவது நாளாக கடலுக்கு செல்லவில்லை.மாவட்டம் முழுவதும் 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசை படகுகள், பைபர் படகுகள் மேடான பகுதிகளுக்கு  இழுத்துவந்து நிறுத்தியுள்ளனர்.

புயல் அறிவிப்புக்கு முன்னர் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நாகை மீனவர்கள் அனைவரும் கரை திரும்பிவிட்டதாக மாவட்ட மீன்வளத்துறையினர் கூறியுள்ளனர்.

 

n

 

பேரிடர் மீட்பு குறித்து தஞ்சை சரக டி,ஐ,ஜி பேட்டி;

,"நாகை மாவட்ட காவல்துறை சார்பில் 120 மீட்பு குழுவினர் தயார்நிலையில் உள்ளனர். வேதாரண்யத்தில் தேசிய பேரிடர் மேலாளண்மை குழுவினர் 50 நபர்கள் மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை குழுவினர் 30  நபர்களும்,  மயிலாடுதுறை, சீர்காழி உட்கோட்டங்களில் தலா 20 நபர்கள் அடங்கிய மாநில பேரிடர் மேலாண்மை ஒரு குழுவினர்  வீதம் அனுப்பப்பட்டு தயார் நிலையில் உள்ளனர்.  நாகை, வேதாரண்யம் ஆகிய பகுதிகளில் காவல்துறை சார்பில் கட்டுப்பாட்டு அறையும் உருவாக்கப்பட்டுள்ளது என்று  கூறியுள்ளார்.


முப்பத்திஎட்டு கிராமம் கடுமையாக பாதிக்கும்;

கஜா புயலால் நாகை மாவட்டம் வேதாரன்யம், பூம்புகார் பழையார்  பகுதிகளில் உள்ள 38 கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.

மேலும், அங்கு வசிக்க கூடிய 86 ஆயிரம் நபர்களை உடனடியாக முகாம்களில் தங்க வைக்கும்  முயற்சியில் மாவட்ட நிர்வாகம்  ஈடுபட்டுள்ளது. இன்று மாலை நாகையில் கரையை கடக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதையடுத்து நாகை மாவட்டம் தெற்குப் பொய்கை நல்லூர் மற்றும் கடற்கரையோர கிராமங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்கள் மற்றும் புயல் பாதுகாப்பு மையங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில்  ஒலிபெருக்கி மூலம் புயல் எச்சரிக்கை செய்து வருகிறது.

 

n

 

அவசர உதவிக்கு 1077 ;

புயல் பாதிப்பு ஏற்பட்டால் பொதுமக்கள் அவசர உதவிக்கு 1077 என்ற இலவச நம்பரை தொடர்புகொண்டு உதவிய பெறலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளனர்.

கஜா புயல் குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை. நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் எச்சரிக்கை.

 

பல லட்சம் டன் உப்பு தேக்கம்;

தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக அதிக உப்பு உற்பத்தி செய்யப்படும் வேதாரண்யத்தில் சிறு, குறு, பெறும் உப்பு வியாபாரிகளால் உற்பத்தி செய்பட்டுள்ள 3 லட்சம் டன் உப்பு  ஏற்றுமதிக்கு தயார்நிலையில் உள்ளது. கஜா புயலில் இருந்து பாதுகாத்திட தார்பாய்கள் மற்றும் பனை ஓலைகளை  கொண்டு மூடி தொழிலாளர்கள் பாதுகாத்து வருகின்றனர்.

 

மருத்துவக்குழு தயார் ;

புயலால் பாதிக்கப்படும் கிராமப்புறங்களில்  பொதுமக்களுக்கு உதவும் வகையில் 4454 முதனிலை பொறுப்பாளர்கள் நியமனம்.

புயலில் கால்நடைகளை பாதுகாக்க 28 குழுக்கள்  தயாராக உள்ளது.  9 தீயணைப்பு வாகனங்களில் 200 தீயணைப்பு வீரர்கள் தயார்.தேசிய பேரிடர் மீட்புப் குழுவினர்   உதவி கமாண்டர் வைரவநாதன் தலைமையில் 3குழுக்களில் 77 நபர்கள்  தயார்.அதிகம் பாதிக்கப்படும் என்பதால் வேதாரண்யத்தில் மட்டும்  2 தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள்.

 

விவசாயம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும்;

நாகை மாவட்டம் முழுவதும் 1லட்சத்து 20ஆயிரம்  ஹெக்டேர் நேரடி நெல் விதைப்பும்,நடவும் செய்யப்பட்டுள்ளது,  20ஆயிரம்  ஹெக்டேர் குருவை சாகுபடியும் செய்யப்பட்டுள்ளது. அதோடு  சாகுபடிக்கு தயார் நிலையில் உள்ள நாற்றுநெற்பயிர்கள்  கஜா  புயல் காரணமாக பெரும் பாதிக்கப்படும்.

ஆறுகள் வாய்க்கால்கள் தூர்வாருவதற்கு ஒதுக்கப்பட்ட நிதிகள் முழுமையாகப் பயன்படுத்தாமல் விட்டதன் விளைவு வாடிகால்கள்  தண்ணீரில் வடியாமல் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும், இளம் பயிர்கள் தண்ணீர் தேங்கி அழுகும் அபாயமும் ஏற்படும்.

 

கடைகள் முன்கூட்டியே அடைக்க உத்தரவு;

புயலின் எச்சரிக்கையால் பள்ளி கல்லூரிகளுக்கு  விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  அதோடு தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று மாலை 5 மணிக்கு மேல் புயல் கரையைக் கடக்கலாம் என்பதால் கடைகள் முழுவதும் அடைக்க உத்தரவிட்டுள்ளனர். தனியார் நிறுவனங்கள் முன்கூட்டியே பூட்டிவிட்டு ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதோடு பஸ் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்கள் வீதிகளில் செல்லவேண்டாம் என்றும் காவல்துறையினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால் வீதிகள் முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது.

 

புயல் குறித்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஆட்டோ விளம்பரங்களை கடலோரம் மற்றும் கடை வீதிகளில் உள்ள மக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரமும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

 

சிதிலமடைந்த மின்கம்பங்கள் உள்ள இடங்களில் இருக்கவேண்டாம் என்றும், தாழ்வான பகுதிகளில் இருந்து கால்நடைகள் உள்ளிட்டவற்றை அப்புறப்படுத்தி கொண்டு மேடான பகுதிக்கு வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. 

 

நாகை துறைமுகம் மற்றும் காரைக்கால் தனியார் துறைமுகத்திலும் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதோடு அரசு ஊழியர்களும் மீட்பு படையினரும், மருத்துவ குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர்.

"வழக்கமாக புயல் என்றால் நான்கு நாட்களுக்கு முன்பே மழை பெய்து மரம் செடி கொடிகள் முழுவதும் மழை நீரால் நனைந்துபோய் இருக்கும், லேசான காற்று அடித்தால் மரம் மற்றும் செடிகள் இடிந்து பேராபத்தை உருவாக்கும். ஆனால் புயலடிக்கும் நிமிடம் வரை ஒரு துளிகூட மழை இல்லாமல் இருப்பது எங்களுக்கு புயல் வருவது போல் தெரியவில்லை"  என பொதுமக்கள் கலாய்க்கவும் செய்கின்றனர்.

 


 

சார்ந்த செய்திகள்