Skip to main content

இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் - சென்னை ஐகோர்ட்

Published on 05/07/2018 | Edited on 05/07/2018
two wheeler helmet


இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவர் ஹெல்மெட் அணிய வேண்டும், காரில் செல்லும் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

 

 

 

மேலும், இருசக்கர வாகனங்களில் பகல் நேரங்களில் எல்இடி விளக்குகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும், கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என ஐகோர்ட் கூறி உள்ளது. கட்டாய ஹெல்மெட், சீட் பெல்ட் அணிவதை முதலில் போலீசார் கடைபிடிக்க வேண்டும். 
 

முதலில் போலீசார் ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்று கூறியுள்ள சென்னை ஐகோர்ட், கார்களில் சீட் பெல்ட் மற்றும் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கி பிறப்பித்த சட்டத்தை அமல்படுத்தியது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வரும் 27ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறை மற்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது.

 

 

 

அதிவேகத்தில் காரில் சென்ற கேரளா முன்னாள் கவர்னர் மற்றும் தற்போதைய நீதிபதிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவை போன்று தமிழகத்திலும் சட்டவிதிகள் உள்ளன அதனை முறையாக பயன்படுத்த வேண்டும் என சென்னை ஐகோர்ட் கூறி உள்ளது.
 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஹெல்மெட் அணியாமல் சென்ற 1.18 லட்சம் பேர் மீது வழக்கு!

Published on 16/09/2019 | Edited on 16/09/2019

தமிழகத்தில் கடந்த இரு நாட்களில் மட்டும் ஹெல்மெட் அணியாமல் சென்ற 1,18,018 பேர் பிடிபட்டதாகவும், அவர்கள் அனைவரின் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளதாக டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது.

tamilnadu Case filed against 1.18 lakh people for not wearing helmet dgp office



அதேபோல்  நான்கு சக்கர வாகனத்தில் சீட் பெல்ட் அணியாமல் சென்ற 36,835 பேர் மீது வழக்குப்பதிவு. கடந்த செப் 14,15 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் சிறப்பு வாகன சோதனை நடைபெற்றதாக டிஜிபி அலுவலகம் கூறியுள்ளது. 

Next Story

ஹெல்மெட் அணியாமல் சென்ற வழக்கு;அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நீதிமன்றம் நோட்டிஸ்!!

Published on 06/12/2018 | Edited on 06/12/2018
highcourt

 

ஹெல்மெட் அணியாமல் மருத்துவ பேரணி பயணமாக இருகசக்கர வாகனத்தில் சென்ற சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி  ட்ராபிக் ராமசாமி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்திருந்தார்.

 

இந்த வழக்கில் இன்று நடந்த விசாரணையில், இது தொடர்பாக விளக்கம் கேட்டு உயர்நீதிமன்ற மதுரைகிளை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது. மேலும் வழக்கு விசாரணையை வரும் 17 ஆம் தேதி தள்ளிவைத்துள்ளது நீதிமன்றம்.