ADVERTISEMENT

ஏப்ரல் 15 அதிகாலை வரை ஒட்டுமொத்த இந்தியாவும் முடக்கம்- மோடி உரை 

08:45 PM Mar 24, 2020 | kalaimohan

இன்று இரவு சரியாக 8 மணிக்கு இந்திய பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அந்த உரையில்,

கரோனாவை சமாளிக்க சமூக விலகல் தான் ஒரே தீர்வு,கரோனா நம்மை தாக்காது என்று யாரும் என நினைக்க கூடாது. கரோனா யாரையும் விட்டுவைப்பதில்லை. நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இரவு 12 மணி முதல் நாடு முழுவதும் தனிமைப்படுத்தபடுகிறது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு என்பது ஒவ்வொரு குடும்பத்தையும் காப்பாற்ற எடுக்கப்பட்ட முடிவு. ஒவ்வொரு இந்தியரும் எனக்கு முக்கியம் எனவே ஊரடங்கிற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

மருத்துவர்கள் தவிர மற்ற யாருக்கும் ஊரடங்கின் போது அனுமதி இல்லை. குறைந்த பட்சம் 21 நாட்கள் ஊரடங்கு பின்பற்ற வேண்டியது முதல்கட்ட தேவையாக இருக்கிறது. மக்கள் சுயகட்டுப்பாட்டுடன் இல்லை என்றால் நாம் அழிவை சந்திக்க நேரிடும். உறவினர்கள் உட்பட வெளியாட்கள் யாரையும் வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டாம். பொருளாதாரத்தை விட மக்களின் பாதுகாப்பே முக்கியம். ஊரடங்கு மூலம் பொருளாதாரம் பாதிக்கப்பட்டாலும் மக்களின் நலனே முக்கியம். இந்த 21 நாட்களை மக்கள் ஆக்கபூர்வமாக செயல்படுத்த வேண்டும். ஒருவருக்கு தெரியாமலேயே கரோனா அவரை தொற்றக்கூடும் கவனமாக இருங்கள். காட்டுத்தீ போல் வேகமாக பரவி வருகிறது. கரோனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் உள்ள விஞ்ஞான அறிவைக் கொண்டு இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ அங்கேயே இருங்கள் கையெடுத்து கும்பிட்டு கேட்கிறேன் அரசுடன் மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால்தான் 100% கரோனாவை கட்டுப்படுத்த முடியும். இரவு பகலாக பாடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்களுக்குப் பாராட்டு தெரிவியுங்கள். ஊடகத்துறையின் சேவைக்கும் பாராட்டு தெரிவியுங்கள். அரசுடன் இணைந்து தனியார் மருத்துவமனைகளும் செயல்பட முன்வந்துள்ளன. தன்னிச்சையாக மருந்து எடுக்க வேண்டாம். வீட்டை விட்டு வெளியே வந்தால், கொரோனாவை அழைப்பதாக அர்த்தம். வெளியே வரமாட்டோம் என சமூக வலைத்தளங்களில் பரப்புங்கள். வதந்திகளை நம்ப வேண்டாம். தனித்திருப்போம் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்போம் என உரையாற்றியனார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT