ஜம்மு காஷ்மீர் பிரச்சனையை மோடி தலைமையிலான அரசு தவறாக வழிநடத்திவிட்டது என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.

Advertisment

Manmohan

காங்கிரஸ் கட்சியின் 84ஆவது தேசிய மாநாடு டெல்லியில் வைத்து நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் முதல்வர் மன்மோகன் சிங், ‘மோடி நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வாக்குறுதிகளை நம்முன் வைத்தார். ஆனால், அந்த வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றவே இல்லை. ஆண்டொன்றுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவேன் என்றார். ஆனால், 2 லட்சம் வேலைவாய்ப்புகளை அவரால் ஏற்படுத்த முடியவில்லை’ எனக் கூறினார்.

மேலும், ‘மோடி அரசு ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை தவறாக வழிநடத்திவிட்டது. அதனால், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அங்கு நிலைமை மோசமாகி விட்டது. நம் நாட்டு எல்லைகள் பதற்றமானவை என்பது இயல்புதான். ஆனால், இந்த அரசு எல்லைப்பிரச்சனையை உள்நாட்டுப் பிரச்சனையாக்கி விட்டது’ என தெரிவித்துள்ளார்.