Modi came to Kumari; Congress struggle

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

இன்று அல்லது நாளை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரிக்கு பிரதமர் வந்துள்ளார். அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து சாலை மார்க்கமாக இன்னும் சிறிது நேரத்தில் விவேகானந்தர் கல்லூரியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார். இந்த ஆண்டில் மட்டும் ஐந்தாவது முறையாக தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி வந்திருக்கிறார். மோடி வருகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு மற்றும் காவல்துறை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பிரதமர் வருகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் பல இடங்களில் கருப்புக்கொடியுடன் போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். தக்கலை அண்ணா சிலை அருகே காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவிஜய் வசந்த், ராஜேஷ்குமார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.