Advertisment

“ஆ... அப்படியா... எங்க பாப்போம்..!” - சட்டப்பேரவைக்கு சைக்கிளில் வந்த எம்எல்ஏ!

Thamimun Ansari

கடந்த 2ம் தேதி இந்த ஆண்டின் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம், கவர்னர் உரையுடன் தொடங்கியது. இந்தநிலையில், 2021 - 22ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டப்பேரவை இன்று (23.02.2021) காலை மீண்டும் கூடியது. கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், கடந்த இரண்டுமுறை சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது போல், இன்று நடைபெறும் சட்டப்பேரவை கூட்டமும் கலைவாணர் அரங்கத்திலேயே நடைபெறுகிறது. அப்போது துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 2021 - 22ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

Advertisment

இதனிடையே பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயவுக்கு நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்களது எதிர்ப்பை போராட்டம், ஆர்ப்பாட்டம் என பல்வேறு வகையில் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் இன்று பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ம.ஜ.க பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. சட்டப்பேரவைக்கு சைக்களில் சென்றார். விலை உயர்வுக்குஎதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சைக்கிளில் பதாகை ஒன்றையும் கட்டியிருந்தார். எம்எல்ஏ ஒருவர் தமிழக சட்டப்பேரவைக்குக் கண்டன பதாகையுடன் சைக்கிளில் வந்ததை, சட்டப்பேரவைக்குச் செல்லும் வழியில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்தனர். சட்டப்பேரவைக்கு வந்திருந்த ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்எல்ஏக்களும் அங்கிருந்த அனைவரையும் கவர்ந்தது தமிமுன் அன்சாரியின் செயல்.

tn assembly mjk THAMIMUN ANSARI
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe