Advertisment

ஈபிஎஸ் -ஓபிஎஸ் தலைமையில் நடக்கவிருந்த எம்.எல்.ஏ. திருமணம் - மணப்பெண் மாயமானதால் பரபரப்பு

es

பவானிசாகர் சட்டமன்ற தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. எஸ்.ஈஸ்வரன் திருமணம் செய்ய இருந்த மணப்பெண் திடீரென மாயமாகியுள்ளார். திருமணம் நடைபெறுவதற்கு இன்னும் ஐந்து தினங்களே உள்ள நிலையில் மணப்பெண் மாயமாகியுள்ளதால் பரபரப்பும், உறவினர்கள் மத்தியில் பதட்டமும் ஏற்பட்டுள்ளது.

Advertisment

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டத்தைச்சேர்ந்த பவானிசாகர் ஒன்றிய அதிமுக மாணவர் அணி செயலளர் மற்றும் பவானிசாகர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எஸ். ஈஸ்வரன் பி.காம். இவருக்கும் கடத்தூரைச்சேர்ந்த ஆர்.சந்தியா எம்.சி.எ. என்பவருக்கும் வரும் 12.9.2018 அன்று பண்ணாரியில் அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில், காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை திருமணம் நடைபெற இருந்தது.

Advertisment

eps

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் ப.தனபால் ஆகியோர் மணவிழாவை நடத்தி வைப்பதாக இருந்தது. திருமணத்தை முன்னிட்டு திருமண அழைப்பிதழ் அனைவருக்கும் கொடுக்கப்பட்டு விட்டது.

திருமணம் நடைபெறுவதற்கு இன்னும் ஐந்து தினங்களே உள்ள நிலையில் மணப்பெண் திடீரென மாயமாகியுள்ளார்.

உறவினர் வீட்டிற்கு செல்வதாக சொல்லிச்சென்ற சந்தியாவை கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் சந்தியாவை காணவில்லை. இதையடுத்து பதற்றமடைந்தசந்தியாவின் பெற்றோர் , தனது மகள் சந்தியா ஊத்துக்குளி அருகே கொளுத்துப் பாளையத்தை சேர்ந்த விக்னேஷ் என்பவரும் பழகி வந்ததாகவும், அவருடன் சந்தியா சென்றிருக்கலாம் எனவும் கடத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

bavanisagar Erode eswaran mla
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe