மு.க.ஸ்டாலினை நலம் விசாரித்த மோடி, அமித்ஷா

பிரதமர் நரேந்திரமோடி, இன்று காலை திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்களைத் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது, திமுக தலைவர் மற்றும் அவரது குடும்பத்தினரின் உடல்நலம் குறித்து முதலில் விசாரித்தார். தயாளு அம்மையாரின் உடல்நலம் குறித்தும் விசாரித்தார். அப்போது பிரதமரின் உடல்நலன் குறித்து ஸ்டாலினும் கேட்டறிந்தார்.

narendra modi  and amit shah speech

ஏப்ரல் 8ம் தேதி நடைபெறும் நாடாளுமன்றக் கட்சிகளின் கூட்டத்துக்கு திமுகவுக்கு அழைப்பு வந்துள்ளது என்றும், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் தகவல்தந்துள்ளார் என்றும், நாடாளுமன்ற திமுக குழுத்தலைவர் டி ஆர் பாலு கலந்து கொள்வார் என்றும் ஸ்டாலின் அப்போது தெரிவித்தார்.

நாட்டின் சுகாதார நிலைமை சீரடைய ஆக்கபூர்வமான ஆலோசனைகளை மத்திய அரசுக்கு வழங்குவோம் என்று கூறிய ஸ்டாலின், மத்திய அரசு ஒவ்வொரு இந்திய மக்களின் வாழ்க்கைக்கும் அரணாக இருக்க வேண்டும் என்று பிரதமரிடம்கேட்டுக் கொண்டார்.

மத்திய அரசு கவனமாகச் செயல்பட்டு வருகிறது என்று பிரதமரும் உறுதி அளித்தார்.இதேபோல் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், ஸ்டாலினை தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.

இதையும் படியுங்கள்
Subscribe