stalin

திமுக தலைவர் கலைஞர் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்துள்ளார்.

திமுக தலைவர் கலைஞர் உடல்நிலை கவலைக்கிமாக உள்ள நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்தார்.

Advertisment

இந்த சந்திப்பின் போது, மு.க.அழகிரி, கனிமொழி, முரசொலி செல்வம், டி.ஆர்.பாலு, ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர். முதல்வருடனான இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடம் நீடித்தது.

முன்னதாக, காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கலைஞரை முதல்வர் எடப்பாடி நலம் விசாரிக்க வந்தபோது, அவருக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் செய்ய தயாராக இருக்கிறோம் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.