/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ssss_0.jpg)
கலைஞர் நலமுடன் இருக்கிறார், விரைவில் குணமடைந்து வருவார் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கலைஞரை நலம் விசாரிக்க சென்னை கோபாலபுரம் இல்லத்துக்கு துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி உள்ளிட்டவர்கள் வருகை தந்ததனர். கலைஞரை சந்தித்து நலம் விசாரித்து விட்டு வெளியே வந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்,
கலைஞர் நலமுடன் இருக்கிறார். விரைவில் குணமடைந்து நலம் பெறுவார். அரசியல் பண்பாடு கருதி வருகை தந்துள்ளோம். ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாத போது அவர்கள் வந்து நலம் விசாரித்து சென்றனர். அதன் அடிப்படையில் நாங்களும் வருகை தந்துள்ளோம். இது ஒரு அரசியல் பண்பாடே என அவர் கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)