ADVERTISEMENT

அமைச்சர் விஜயபாஸ்கரை சுற்றி சுற்றி வரும் நாளைய முதல்வர் கிராபிக்ஸ் வாசகம்...

10:44 PM May 03, 2020 | rajavel

ADVERTISEMENT


தமிழ்நாட்டில் கரோனா தொற்று தொடங்கியபோது மணிக்கு ஒரு முறை ஊடகங்களில் முகம் காட்டிக் கொண்டே இருந்தார் அமைச்சர் விஜயபாஸ்கர். இதனால் அவரது பெயரில் இயங்கும் பல்வேறு சமூகவலைதளப் பக்கஙகளிலும் நாளைய முதல்வர் விஜயபாஸ்கர் என்று ஏகத்திற்கும் பாராட்டிக் கொண்டிருந்தனர். இந்தப் பாராட்டுகளும் ஊடக வெளிச்சங்களும் நீடிக்கவில்லை. அடுத்து துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஊடகங்களைச் சந்திக்க அனுமதிக்கப்பட்டார். இதனால் முதல்வருக்கும் அமைச்சருக்குமான மோதல் உச்சத்தில் இருந்தது.

ADVERTISEMENT


இந்த நிலையில் தான் தனது சொந்த தொகுதி மக்களுக்கு கரோனா நிவாரணமாக அரிசி கொடுக்க திட்டமிட்டவர் அரிசி பைகளில் ஜெ, முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஒ பி எஸ் படத்துடன் தனது படத்தையும் அச்சிட்டு மண்ணச்சநல்லூர் பொன்னி அரிசி பைகளை ஞாயிற்றுக்கிழமை வழங்கினார். இந்த வீடியோ மற்றும் படங்கள் அவரது பெயரில் இயங்கும் பல தளங்களிலும் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

கரோனா ஊரடங்கால் மக்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ள இந்த நிலையில் நிவாரண பைகளில் கூட அமைச்சர் விளம்பரம் தேடுவதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில் மாலையிலிருந்து அதே அரிசி பையில் நாளைய முதல்வர் விஜயபாஸ்கர் என்று அச்சிடப்பட்டுள்ளதாக வட்டமிட்டு படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவத் தொடங்கியுள்ளது. இதனால் மறுபடியும் முதல்வர் - அமைச்சருக்கான மோதல் ஏற்படுமோ என்ற நிலை உள்ளது.


ஆனால் அமைச்சர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பொதுமக்களுக்கு நேரடியாகக் கொடுத்த நிவாரணங்களில் அரிசி பையில் நாளைய முதல்வர் என்ற வாசகம் இல்லை. ஆனால் திடீரென சமூக வலைத்தளங்களில் வெளியான நிவாரணமாக வழங்கிய அரிசி பைகளில் வட்டம் போட்டு கிராபிக்ஸ் செய்துள்ளனர். அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிரான எண்ணம் கொண்ட யாரோ தான் நாளைய முதல்வர் என்ற வாசகத்தை கிராபிக்ஸ் செய்து அச்சிட்டு சமூக வலைத்தளங்களில் பரவ விட்டதுடன், முதல்வர் எடப்பாடி கண்ணில் படும் வரை பகிருங்கள் என்று பரப்பி வருகின்றனர் என்று அமைச்சரின் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.

மேலும் சில அமைச்சர் விஜயபாஸ்கரின் ஆதரவாளர்களோ, அமைச்சரின் மீது பற்றுள்ளவர்களாகக் காட்டிக் கொள்ளும் சிலர், அவர் பெயரில் மன்றம் தொடங்கி சமூக வலைத்தளங்களில் நல்லது செயவதாகப் போடும் பதிவுகள் அமைச்சருக்கு எதிராகத் திரும்புகிறது. இதனை அமைச்சர் உணரவில்லை. அதனை உணரும் வரை அவருக்குச் சிக்கல்கள் தான் என்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT