Skip to main content

அமைச்சர் விஜயபாஸ்கரை சுற்றி சுற்றி வரும் நாளைய முதல்வர் கிராபிக்ஸ் வாசகம்...

Published on 03/05/2020 | Edited on 04/05/2020

 

C. Vijayabaskar


தமிழ்நாட்டில் கரோனா தொற்று தொடங்கியபோது மணிக்கு ஒரு முறை ஊடகங்களில் முகம் காட்டிக் கொண்டே இருந்தார் அமைச்சர் விஜயபாஸ்கர். இதனால் அவரது பெயரில் இயங்கும் பல்வேறு சமூகவலைதளப் பக்கஙகளிலும் நாளைய முதல்வர் விஜயபாஸ்கர் என்று ஏகத்திற்கும் பாராட்டிக் கொண்டிருந்தனர். இந்தப் பாராட்டுகளும் ஊடக வெளிச்சங்களும் நீடிக்கவில்லை. அடுத்து துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஊடகங்களைச் சந்திக்க அனுமதிக்கப்பட்டார். இதனால் முதல்வருக்கும் அமைச்சருக்குமான மோதல் உச்சத்தில் இருந்தது.
 

C. Vijayabaskar


இந்த நிலையில் தான் தனது சொந்த தொகுதி மக்களுக்கு கரோனா நிவாரணமாக அரிசி கொடுக்க திட்டமிட்டவர் அரிசி பைகளில் ஜெ, முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஒ பி எஸ் படத்துடன்  தனது படத்தையும் அச்சிட்டு மண்ணச்சநல்லூர் பொன்னி அரிசி பைகளை ஞாயிற்றுக்கிழமை வழங்கினார். இந்த வீடியோ மற்றும் படங்கள் அவரது பெயரில் இயங்கும் பல தளங்களிலும் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
 

கரோனா ஊரடங்கால் மக்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ள இந்த நிலையில் நிவாரண பைகளில் கூட அமைச்சர் விளம்பரம் தேடுவதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில் மாலையிலிருந்து அதே அரிசி பையில் நாளைய முதல்வர் விஜயபாஸ்கர் என்று அச்சிடப்பட்டுள்ளதாக வட்டமிட்டு படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவத் தொடங்கியுள்ளது. இதனால் மறுபடியும் முதல்வர் - அமைச்சருக்கான மோதல் ஏற்படுமோ என்ற நிலை உள்ளது.
 

C. Vijayabaskar

 

http://onelink.to/nknapp


ஆனால் அமைச்சர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பொதுமக்களுக்கு நேரடியாகக் கொடுத்த நிவாரணங்களில் அரிசி பையில் நாளைய முதல்வர் என்ற வாசகம் இல்லை. ஆனால் திடீரென சமூக வலைத்தளங்களில் வெளியான நிவாரணமாக வழங்கிய அரிசி பைகளில் வட்டம் போட்டு கிராபிக்ஸ் செய்துள்ளனர். அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிரான எண்ணம் கொண்ட யாரோ தான் நாளைய முதல்வர் என்ற வாசகத்தை கிராபிக்ஸ் செய்து அச்சிட்டு சமூக வலைத்தளங்களில் பரவ விட்டதுடன், முதல்வர் எடப்பாடி கண்ணில் படும் வரை பகிருங்கள் என்று பரப்பி வருகின்றனர் என்று அமைச்சரின் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.
 

மேலும் சில அமைச்சர் விஜயபாஸ்கரின் ஆதரவாளர்களோ, அமைச்சரின் மீது பற்றுள்ளவர்களாகக் காட்டிக் கொள்ளும் சிலர், அவர் பெயரில் மன்றம் தொடங்கி சமூக வலைத்தளங்களில் நல்லது செயவதாகப் போடும் பதிவுகள் அமைச்சருக்கு எதிராகத் திரும்புகிறது. இதனை அமைச்சர் உணரவில்லை. அதனை உணரும் வரை அவருக்குச் சிக்கல்கள் தான் என்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பரபரப்பான அரசியல் சூழல்; ஹரியானாவில் புதிய முதல்வர் பதவியேற்பு! 

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
A turbulent political environment; New Chief Minister sworn in in Haryana!

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. விரைவில் தேர்தல் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஒரு சில கட்சிகளில் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், 543 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களில் முதற்கட்டமாக 195 வேட்பாளர்களின் பெயர்களை பா.ஜ.க. வெளியிட்டிருந்தது. அதேபோன்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் 39 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது.

இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் ஹரியானா மாநிலத்தில் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து ஜனநாயக் ஜனதா கட்சி விலகியதால், ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் ராஜினாமா செய்தார். மொத்தம் 90 சட்டமன்ற இடங்களைக் கொண்ட ஹரியானா மாநிலத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்த மாநிலத்தில் ஆட்சி அமைக்க 46 இடங்கள் தேவை என்ற பட்சத்தில் பா.ஜ.க வெறும் 40 இடங்களை மட்டுமே கைப்பற்றியிருந்தது. அதனால், 10 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட ஜனநாயக் ஜனதா கட்சியுன் கூட்டணியை உருவாக்கி பா.ஜ.க. ஹரியானாவில் ஆட்சி அமைத்தது. அதில், பா.ஜ.க.வின் மனோகர் லால் கட்டார் முதல்வராகவும், ஜனநாயக் ஜனதா கட்சியின் தலைவரான துஷ்யந்த் சவுதாலா துணை முதல்வராகவும் நியமிக்கப்பட்டனர். அதே சமயம் மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவுடன் நேற்று (11-03-2024) ஜனநாயக் ஜனதா கட்சி சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் இரு கட்சிகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. அதனால், மக்களவைத் தேர்தல் வருவதற்கு முன்பாகவே ஜனநாயக் ஜனதா கட்சி, பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அதிரடியாக விலகியது.

அதனைத் தொடர்ந்து பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் குருசேத்ரா மக்களவைத் தொகுதியின் பா.ஜ.க. எம்.பி.யும், ஹரியானா மாநில பா.ஜ.க. தலைவருமான நயாப் சைனி பா.ஜ.க. சட்டமன்ற கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். புதியதாக அமைய உள்ள பா.ஜ.க. ஆட்சிக்கு 7 சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் உடன் ஹரியானா லோகித் கட்சியின் ஒரு எம்.எல்.ஏ. ஆதரவு தர உள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது. இதனையடுத்து நயாப் சைனி ஹரியானா மாநில ஆளுநர் பண்டாரு தத்தாத்ராயாவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதனை ஏற்றுக்கொண்ட ஆளுநர் பண்டாரு தத்தாத்ராயா, முதல்வராகப் பதவியேற்க நயாப் சைனிக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

A turbulent political environment; New Chief Minister sworn in in Haryana!

இந்நிலையில் நயாப் சிங் சைனி சண்டிகரில் உள்ள ராஜ்பவனில் ஹரியானா முதல்வராகப் பதவியேற்றார். நயாப் சிங் சைனிக்கு ஹரியானா ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மேலும் பாஜக மூத்த தலைவர்களான ஜெய் பிரகாஷ் தலால், பன்வாரிலால், மூல்சந்த் சர்மா, கன்வர் பால் குஜ்ஜர் மற்றும் சுயேச்சை எம்எல்ஏ ரஞ்சித் சிங் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இந்த பதவியேற்பு விழாவில் முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டரும் கலந்து கொண்டார். மேலும் மனோகர் லால் கட்டார் மக்களவைத் தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Next Story

அடுத்தடுத்து நடக்கும் மாற்றங்கள்; ஹரியானாவில் ஆட்சியை தக்க வைக்குமா பாஜக?

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
who is the for new Chief Minister in Haryana

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. விரைவில் தேர்தல் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஒரு சில கட்சிகளில் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், 543 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களில் முதற்கட்டமாக 195 வேட்பாளர்களின் பெயர்களை பா.ஜ.க. வெளியிட்டிருந்தது. அதேபோன்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் 39 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது.

இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் ஹரியானா மாநிலத்தில் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து ஜனநாயக் ஜனதா கட்சி விலகியதால், ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் ராஜினாமா செய்துள்ளார். மொத்தம் 90 சட்டமன்ற இடங்களை கொண்ட ஹரியானா மாநிலத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த மாநிலத்தில் ஆட்சி அமைக்க 46 இடங்கள் தேவை என்ற பட்சத்தில் பா.ஜ.க வெறும் 40 இடங்களை மட்டுமே கைப்பற்றியிருந்தது. அதனால், 10 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட ஜனநாயக் ஜனதா கட்சியுன் கூட்டணியை உருவாக்கி பா.ஜ.க. ஹரியானாவில் ஆட்சி அமைத்தது. அதில், பா.ஜ.க.வின் மனோகர் லால் கட்டார் முதல்வராகவும், ஜனநாயக் ஜனதா கட்சியின் தலைவரான துஷ்யந்த் சவுதாலா துணை முதல்வராகவும் நியமிக்கப்பட்டனர்.

அதே சமயம் மக்களவைத் தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவுடன் நேற்று (11-03-24) ஜனநாயக் ஜனதா கட்சி சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் இரு கட்சிகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. அதனால், மக்களவை தேர்தல் வருவதற்கு முன்பாகவே ஜனநாயக் ஜனதா கட்சி, பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அதிரடியாக விலகியுள்ளது.

இந்நிலையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் குருசேத்ரா மக்களவைத் தொகுதியின் பா.ஜ.க. எம்.பி.யும், ஹரியானா மாநில பா.ஜ.க. தலைவருமான நயாப் சைனி பா.ஜ.க. சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து நயாப் சைனி ஹரியானா மாநில ஆளுநர் பண்டாரு தத்தாத்ராயாவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இன்று மாலை நயப் சைனி ஹரியானாவின் புதிய முதல்வராக பதவியேற்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. புதியதாக அமைய உள்ள பாஜக ஆட்சிக்கு 7 சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் உடன் ஹரியானா லோகித் கட்சியின் ஒரு எம்.எல்.ஏ. ஆதரவு தர உள்ளார். மேலும் மனோகர் லால் கட்டார் மக்களவைத் தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது.