Skip to main content

நீட் எழுதச்சென்ற 1,200 பேரை அரவணைத்து அன்பைப் பெற்ற மசூதி! 

Published on 08/05/2018 | Edited on 08/05/2018

நீட் தேர்வு எழுதச்சென்ற மாணவர்கள் மற்றும் உடன்சென்ற பெற்றோர்களை அரவணைத்த மசூதி நிர்வாகம், பல தரப்பினரிடமும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

 

Masjid

 

மே 6ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத்தேர்வான நீட் நடைபெற்றது. நாடு முழுவதும் இந்தத் தேர்வு நடைபெற்றாலும், தமிழகத்தைச் சேர்ந்த சில மாணவர்களுக்கு மட்டும் கேரளா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் தேர்வு மையங்கள் போடப்பட்டிருந்தன. இதனால், பெற்றோர் மற்றும் மாணவர்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகினர்.

 

கேரள மாநிலம் கொச்சி மாவட்டத்திற்கு அருகாமையில் உள்ள ஆலுவா பகுதியில் உள்ளது வாடி ஹிரா மசூதி. இந்த மசூதிக்கு மிக அருகாமையில் உள்ள சிவகிரி பள்ளி மற்றும் அலம் பள்ளி ஆகியவை நீட் தேர்வு மையங்களாக தேர்வு செய்யப்பட்டிருந்தன. பல்வேறு பகுதிகளில் இருந்து இந்தப் பள்ளிகளுக்கு தேர்வு எழுத வந்தவர்கள் வெயிலில் காத்திருப்பதைக் கண்ட மசூதி நிர்வாகம், அவர்களை உள்ளே அழைத்து உணவு, குடிநீர் வழங்கி அரவணைத்துள்ளது. 

 

இதேபோல், கடந்த ஆண்டும் நீட் தேர்வு எழுதச்சென்ற பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு வாடி ஹிரா மசூதியில் உபசரிப்பு வழங்கப்பட்டுள்ளது. அப்போது தற்செயலாக உபசரிப்பு வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு முறையான முன்னேற்பாடுகளுடன் செயல்பட்டு பெற்றோர் மற்றும் மாணவர்களை காத்துள்ளனர். மதம், மொழி என எந்த பாகுபாடுகளும் இன்றி பெற்றோருக்கு உரிய உபசரிப்பைத் தந்த மசூதி நிர்வாகம் ஆயிரத்து இருநூறு பேரின் அன்பைப் பெற்றிருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஞானவாபி மசூதி வழக்கில் பரபரப்பு தீர்ப்பளித்த நீதிபதிக்கு உயர் பதவி

Published on 29/02/2024 | Edited on 29/02/2024
High rank for the judge who decided the riot for Gnanawabi Masjid Affair

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி அருகே காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் ஞானவாபி மசூதி என்னும் இஸ்லாமிய வழிபாட்டுத்தலம் ஒன்று உள்ளது. இங்கு இந்து மதக் கடவுளான சிவலிங்கம் ஒன்று கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மசூதியில் கண்டறியப்பட்ட லிங்க வடிவிலான பொருளின் காலத்தைக் கண்டுபிடிக்கத் தடயவியல் பரிசோதனை செய்ய அனுமதிக்கக்கோரி 5 பெண்கள் சார்பில் கடந்த 2022ஆம் ஆண்டு வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, இந்த மனுவை விசாரித்த வாரணாசி மாவட்ட நீதிமன்றம், ஞானவாபி மசூதியில் ஆய்வு மேற்கொள்ள அனுமதி அளித்து இருந்தது. அதன்படி காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே தொல்லியல் நிறுவனம் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என நிபந்தனை விதித்துள்ள நீதிமன்றம், ஞானவாபி மசூதியில் தொழுகை நடத்த எந்தத் தடையும் இதனால் ஏற்படக்கூடாது எனத் தெரிவித்து இருந்தது. மசூதி முழுவதிலும் ஆய்வு மேற்கொள்ள இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனத்திற்கு அனுமதி அளித்திருந்தது. மேலும், தடய அறிவியல் ஆய்வறிக்கையை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் தேதிக்கு முன் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வழக்கை விசாரித்த நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இதனையடுத்து, ஞானவாபி மசூதியில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள இந்தியத் தொல்லியல் துறைக்கு இடைக்காலத்தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. மேலும், வாரணாசி நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அலகாபாத் நீதிமன்றத்தை நாட உச்சநீதிமன்றம் மனுதாரர்களுக்கு அறிவுறுத்தி இருந்தது.

உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் படி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில், ஞானவாபி மசூதியில் ஆய்வுக்கு அனுமதிக்கக் கூடாது என்று இஸ்லாமிய அமைப்பின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்த போது, ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்ததுடன், மசூதியில் ஆய்வுக்கு அனுமதிக்கக் கூடாது என்ற இஸ்லாமிய அமைப்பு கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதனிடையே, ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்த தொல்லியல் துறைக்கு அனுமதி அளித்ததன் அடிப்படையில், தொல்லியல் துறை ஆய்வாளர்கள் வாரணாசி நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையில், ஞானவாபி மசூதியில் 55 இந்து தெய்வ சிற்பங்கள் கண்டறியப்பட்டதாக விவரிக்கப்பட்டிருந்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதனையடுத்து, இது தொடர்பான வழக்கு கடந்த மாதம் 31ஆம் தேதி அன்று, வாரணாசி மாவட்ட நீதிபதி அஜய கிருஷ்ண விஷ்வேஷா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஞானவாபி மசூதியின் தெற்கு பகுதியில் இந்துக்கள் வழிபாடு நடத்தலாம் என அதிரடி உத்தரவை பிறப்பித்தார். மேலும், அங்கு வழிபாடு நடத்துவதற்காக அர்ச்சகரை நியமிக்க காசி விஸ்வநாதர் அறக்கட்டளைக்கு உத்தரவிட்டார். வாரணாசி நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து ஞானவாபி மசூதி நிர்வாகம் சார்பில், அலகாபாத்  நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கடந்த 26ஆம் தேதி நீதிபதி ரஞ்சன் அகர்வால் முன்பு வந்தது. அப்போது, ஞானவாபி மசூதி நிர்வாகம் அளித்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து, பாதாள அறையில் இந்துக்கள் தொடர்ந்து வழிபாடு செய்ய அனுமதி வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த சூழ்நிலையில், கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதி அன்று ஞானவாபி மசூதிக்குள் இந்துக்கள் வழிபட அனுமதியளித்த வாரணாசி மாவட்ட நீதிபதிக்கு, மாநில அரசு அதிகாரியாக உத்திரப்பிரதேச அரசு பணி நியமனம் வழங்கியுள்ளது. வாரணாசி மாவட்ட நீதிபதியாக அஜய கிருஷ்ண விஷ்வேஷா பொறுப்பு வகித்து வந்தார். இவர், ஓய்வு பெறும் கடைசி நாளில்தான், ஞானவாபி மசூதிக்குள் இந்துக்கள் வழிபாடு செய்யலாம் என்ற பரபரப்பு தீர்ப்பை வழங்கியிருந்தார். இந்த நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி அஜய கிருஷ்ண விஷ்வேஷா, உத்தரபிரதேச மாநில அரசின் கீழ் இயங்கும் பல்கலைக்கழகத்தின் குறைதீர் அதிகாரியாக (ombudsman) நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

Next Story

நீட் தேர்வு; விண்ணப்ப பதிவிற்கான அறிவிப்பு வெளியீடு!

Published on 10/02/2024 | Edited on 10/02/2024
Notification Release for Application Registration for NEET Exam

2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வுக்காக விண்ணப்பம் செய்ய வேண்டிய தேதியை தேசிய தேர்வு மையம் அறிவித்துள்ளது.

2024 - 25 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு (2024) மே மாதம் 5 ஆம் தேதி நடைபெறும் எனத் தேசிய தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்திருந்தது. தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், தற்போது தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தேசிய தேர்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று (10-02-24) முதல் நீட் தேர்வு எழுதும் மாணவ - மாணவிகள் ஆன்லைன் வழியாக விண்ணப்ப பதிவை மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது. மேலும், www.nta.ac.in, exams.nta.ac.in ஆகிய இணையதள முகவரிகள் மூலமாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும், மார்ச் 9 ஆம் தேதி இரவு 9 மணி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.