Advertisment

கூட்டத்தை பார்த்தாலே அலர்ஜி... தடியடி நடத்தி குரூரமாக ரசிக்கும் இந்த ஏ.எஸ்.பி. யார்?

Advertisment

selvaraதூத்துக்குடியில் செவ்வாய் அன்று நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டுப் பேரணியில் அமைதியாக சென்ற தொண்டர்களைப் போலீசார் அத்து மீறித் தாக்கிய வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், திருப்பூரைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் மகன் அகிலேஷ் (4), மதுரையைச் சேர்ந்த சோலைக்குமார் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதுதவிர, மேலும் 4 பேருக்கு காயம் ஏற்பட்டது.

அமைதியாய் சாத்வீக முறையில் சென்று கொண்டிருந்த மாக்சிஸ்ட் கட்சியின் செந்தொண்டர் பேரணியில் தடியடி நடத்தி அனைத்துக் கட்சியினராலும் வறுப்பட்டிக்கொண்டிருப்பவர் தூத்துக்குடி மாநகர ஏ.எஸ்.பி. செல்வன் நாகரத்தினம். யார் இவர்? விசாரணையில் இறங்கினால் அத்தனையும் அதிர்ச்சி ரகமே. பேரணி ஊர்வலம் எது நடந்தாலும் சினிமாப் பாணியில் தடியடியை நடத்தி குரூரமாக ரசிப்பவராம் இந்த ஏ.எஸ்.பி.

"தீபாவளிப் பண்டிகையின் பொழுது இரவு நேரக்கடைகள் தான் ஏழைகளுக்கு வரப்பிரசாதம். 2016ம் ஆண்டு தீபாவளியின் பொழுது நகரின் மையப்பகுதியிலுள்ள ஜவுளிக்கடை இரவு பத்துமணியையும் தாண்டி திறந்துள்ளதாக படைப்பட்டாளத்துடன் ஜவுளிக்கடைக்குள் நுழைந்த இதே ஏ.எஸ்.பி.டீம் ஜவுளிக்கடையை துவம்சம் செய்து பூட்ட வைக்க, ஒட்டு மொத்த வியாபாரிகளும் சேர்ந்து சாலையில் வந்து ஆர்ப்பாட்டம் நடத்த மன்னிப்புக் கேட்டு அப்போது எஸ்கேப்பாகியுள்ளார் இவர்.

Advertisment

இது தான் இப்படியென்றால் கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் தடியடி நடத்தி ஆட்டம் காண்பித்தவர், கிறிஸ்துமல் விழா கேரல் ஊர்வலத்தின் பொழுதும் விழா லாரியை சிறைவைக்க, ஊர் மக்கள் ஒன்று திரண்டு நியாயம் கேட்டபொழுதும் தடியடி நடத்தி தன்னுடைய குரூரப்புத்தியை வெளிப்படுத்திய சினிமா போலீஸ் இவர். இப்பொழுது செந்நிறத்தொண்டர் பேரணியில் அதே பாணியில் கை வைக்க துரத்தியடிக்கப்பட்டுள்ளார்." என முந்தைய வரலாறை ஒப்புவிக்கின்றனர் உள்ளூர் மக்கள்.

காவல்துறை அதிகாரி ஒருவரோ., "பூர்வீகம் கரூர் என்றாலும், வாழ்வாதாரத்திற்கு சென்னையிலேயே செட்டில் ஆன குடும்பம் இவருடையது. அப்பா இயற்கை எய்த அம்மாவின் அரவணைப்பிலேயே வளர்க்கப்பட்டவர். அதே வேளையில் இது ஒரு வகையான சினிமாத்தன சைக்கோனத்தனம். கூட்டத்தினைப் பார்த்தாலே அவருக்கு அலர்ஜி போல்.! உடனே லத்தி சார்ஜ் செய்வது தான் இவரது பாணி. தடியடி நடத்த வேண்டிய சூழ்நிலை இருந்தாலே யோசித்து பேசி முடிவெடுப்போம். இது கண்டிக்கத்தக்கது. துறை ரீதியான நடவடிக்கை கண்டிப்பாக வரும்." என்றார் அவர்.

selvan rathinam

இது இப்படியிருக்க, செந்நிறத்தொண்டர் பேரணியில் தடியடி நடத்திய ஏ.எஸ்.பி.செல்வன் நாகரத்தினம் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும். இல்லையெனில் மாநிலம் முழுவதும் பெரும் அளவில் எதிர்ப்பினைக் காட்டவேண்டி வரும்." என எச்சரிக்கை விடுத்துள்ளன கம்யூனிஸ்ட், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள். காவல்துறை மக்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும். சமூக விரோதிகள் போல் இருக்ககூடாது. தடியடியில் சம்பந்தபட்ட காவல்துறை அதிகாரியை பணிநீக்கம் செய்யக்கோரி தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளார் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்.

ASP Marxist Party
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe