Skip to main content
Nakkheeran Magazine Nakkheeran Magazine

மாணவியின் பரபரப்பு புகார்!  நிர்மலாதேவியை அடுத்து சிக்கும் கருணமகாராஜன்! மீண்டும் பாலியல் புகாரில் மதுரை காமராஜர் பல்கலைகழகம்

indiraprojects-large indiraprojects-mobile
m

 

மாணவிகளை தவறானபாதைக்கு அழைத்ததாக நிர்மலாதேவி மற்றும் முருகன் கருப்பச்சாமி ஆகியோர் கைதுசெய்யபட்டு சிறையில் இருக்கும் நிலையில்,  பேராசிரியர் கலைச்செல்வன் மற்றும் உயர் பொறுப்பில் உள்ளவர்களிடம் விசாரனையை தீவிரப்படுத்தாமல் இருவரை மட்டும் பலிகடா ஆக்குகிறார்கள்  என்று கைதான முருகன் குடும்பத்தார் குற்றச்சாட்டு வைக்கும் வேளையில், மதுரை காமராஜர் பல்கலையில் கவர்னர்,  நிர்மலாதேவி சம்மந்தபட்ட சி.சி.டி.வி மற்றும் வீடியோ ஆதாரங்களை முற்றிலும் அழித்ததற்கு முழுகாரணம் திரைப்படம் மற்றும்  மின்னனு ஆய்வு மைய பொறுப்பாளர் கருணமகாராஜன்தான் என்றும்  குற்றச்சாட்டுகளை சொல்லிக்கொண்டு இருக்கும் போது,   தற்போது புதிதாக கருணமகாராஜன்  மீது இதழியல் பி.எச்.டி ஆய்வு மாணவி,  தன்னை கடந்த ஒரு வருடமாக பாலியல் தொல்லை கொடுத்து வந்தார் என்ற பகீர் குற்றச்சாட்டை கூறி பல்கலைக்கழக பதிவாளரிடம் புகார் மனு அளித்து   பெரும் பரபரப்புக்கு மீண்டும் மதுரை காமராஜர் பல்கலையை கொண்டு வந்துள்ளார்.

 

k

 

இதுகுறித்து புகார் தெரிவித்த மாணவியிடம் நாம்  பேசியபோது,  ”இங்கு நடப்பது எல்லாமே மிக மிக மோசமாக இருக்கு.  இந்த கருணமகாராஜன் எல்லா மாணவிகளிடமும் கையை பிடித்து தனக்கு கைரேகை பார்க்கதெரியும் என்று கையை பிடிப்பார்.  பின்பு அவர்களை அவர் இழுத்த இழுப்பிற்கெல்லாம் வரவேண்டும் என்று கட்டாயப்படுத்துவார்.  அப்படித்தான் என்னையும் பலமுறை முன்னாள் துணைவேந்தர் செல்லத்துறையை தனிமையில் பார்க்கவேண்டும் என்று எவ்வளவோ வற்புறுத்தினார்.    இங்கு இருக்கும் என்னை போன்ற மாணவிகளுக்கும் இதே நிலைமைதான்.  அப்போதுதான் பி.எச்.டி வாங்கமுடியும் என்ற நிலை இருக்கு.  ஒரு நிர்மலாதேவியைத் தானே பார்த்தீர்கள்.  இங்கு உயர் பதவியில் இருக்கும் நிர்மலாதேவிகள் திரைமறைவில் இருக்கிறார்கள் .

 

பெண்கள் அந்த விசயத்திற்கு அட்ஜஸ்ட் பண்ணாதான் உயர்படிப்பு  படிக்கமுடியும் என்ற நிலை எனக்கு மிகுந்த மன உளைச்சலை கொடுத்ததால்,  ஒரு வாரம் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன்.  பொறுத்து பொறுத்து  பார்த்த பிறகுதான் புகாருக்கே போனேன்’’என்று நம்மிடம் கூறினார்.

 

m

 

இதுகுறித்து பல்கலைக் கழக வளாகத்தில் இருந்த மற்றொரு மாணவி,  ‘’இந்த கருணமகாராஜனை பற்றி ஏற்கனவே இங்கு படிக்கும் மற்றொரு மாணவர் ஒருவர் பதிவாளர் இ.மெயிலில் இருந்து முதல் அமைச்சர்,  கவர்னர் மற்றும் பிரதமர் என அனைவருக்கும் இவர்கள் செய்யும் பாலியல் பிளாக்மெயில் மற்றும் படிப்பு சான்றிதழுக்கு லஞ்சம் எப்படியெல்லாம் வாங்குகிறார்கள் என பட்டியலிட்டு அனுப்பிவைக்க,  அது பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது.


  பதிவாளர் இ.மெயிலில் இருந்து புகார் அனுப்பியதால் அந்த மாணவரை கண்டுபிடித்து பின் கைது செய்து பல்கலையில் இருந்து முற்றிலும் நீக்கபட்டார். அது தொடர்பாக வழக்கு நடைபெறுகிறது. இது இந்த குறுகிய காலத்தில் இரண்டாவது புகார்.  கருணை மகாராஜனும் உதவி பேராசிரியர் தான். இதழியல் திரைப்படதுறை தலைவராக இருப்பதற்கு தகுதியே இல்லாதவர் இவர்.  பதிவாளர் மற்றும் துனைவேந்தர் போன்ற உயர் பொறுப்புகளில் உள்ளவர்களுக்கு இதுமாதிரி அற்ப விசயங்களை செய்துதான் இந்த பதவியை அடைந்தார் நிர்மலாதேவி.  விசயத்தையே முழுவதும் தெரியாமல் எல்லாவற்றுக்கும் இருவர்தான் காரணம் என்று முழுபூசணிக்காயை மறைத்தவர்களுக்கு இதை மறைக்கத்தெரியாதா என்ன? நிர்மலாதேவியை தைரியமாக வெளிஉலகிற்கு கொண்டுவந்த அந்த ஐந்து மாணவிகளின் துணிச்சல்தான் கருணமகாராஜன் மீது நாங்கள் புகார் சொல்லுவதற்கு காரணம்.’’ என்று கூறினார்.

 

k

 
பல்கலை மாணவி புகார் குறித்து சம்மந்தப்பட்ட திரைப்பட மின்னனு ஆய்வு மைய பொறுப்பாளர் கருணமகாராஜனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது,  ”இது சம்மந்தமாக என்னிடம் எதுவும் கேட்காதீர்கள்.  எனக்கு எதுவும் தெரியாது.  எதுவும் பத்திரிக்கைக்கு சொல்லவும் மாட்டேன். அப்படி பதில் வேண்டும் என்றால் பல்கலைக்கழகத்தில் எனக்கு மேல் உள்ளவர்களை கேட்டுக்கொள்ளுங்கள்” என்று முடித்துக் கொண்டார்.  

 

 பல்கலையில் பாலியல் தொடர்பான புகார்கள் சங்கிலி தொடர் போல  தொடரும்போல தெரிகிறது. 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Loading...