Advertisment

பிச்சைக்காரரின் மனிதாபிமானம் - கரோனா நிவாரணத்திற்கு ரூ.10 ஆயிரம் வழங்கினார்...

madurai

கரோனா நிவாரண நிதியாக ரூ.10 ஆயிரத்தை மதுரை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார் பிச்சைக்காரர் பூல்பாண்டியன். பொது மக்களை நெகிழ வைத்தது இவரின் மனிதாபிமானம்.

Advertisment

தூத்துக்குடி மாவட்டம், ஆலங்குளத்தை சேர்ந்த பூல்பாண்டியன் என்ற பிச்சைக்காரர் இன்று மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கரோனா நிவாரண நிதியாக ரூபாய் 10 ஆயிரத்தை நேரில் சென்று வழங்கினார்.

Advertisment

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக மதுரை வந்து இருந்தேன். நடைபாதைகளில் சாலை ஓரங்களில் தங்கியிருந்த என்னை தன்னார்வலர்கள் மீட்டனர். மதுரை மாநகராட்சி சார்பாக தங்க வைக்கட்டிருந்தேன்.இந்நிலையில் கரோனாவால் பாதிக்கப்படும் மக்களுக்காக என்னால் இயன்ற உதவியைசெய்ய வேண்டும் என்ற அடிப்படையில் மதுரை மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த காய்கறிசந்தை, பழ சந்தை மற்றும் பூ மார்க்கெட்டுகளில் பிச்சை எடுத்து கடந்த 15 நாட்களில் ரூபாய் 10 ஆயிரத்தை சேகரித்தேன்.அந்தத் தொகையை என்று மதுரை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கவிருக்கிறேன்.

மேலும் 10 மாவட்டங்களில் இதுபோன்று பிச்சை எடுத்து தலா ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா ரூ.10 ஆயிரத்தை வழங்க திட்டமிட்டுள்ளேன். அதன் முதல் கட்டமாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் இன்று வழங்கியிருக்கிறேன்' என்றார்.

மேலும் அவர் கூறுகையில், கடந்த நாற்பதாண்டுகளாக நான் பிச்சை எடுக்கும் பணத்தில் பெரும்பகுதியை ஏறக்குறைய 400 பள்ளிகளுக்கு மேல் நாற்காலி மேசைகள் குடிநீர் சுத்திகரிப்பான் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வழங்கி உள்ளேன். தற்போது கரோனா வைரஸ் தொற்றால் மக்கள் பாதிக்கப்படுவதை அறிந்து என்னால் இயன்ற உதவியை வழங்கி வருகிறேன் என்றார்.

help Financial issue corona virus madurai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe