Advertisment

கழிவு நீர் அகற்றும்போது ஏற்படும் உயிரிழப்பு; உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

Loss of life during waste water disposal Supreme Court action order

Advertisment

கழிவு நீர் அகற்றும்போது உயிரிழப்பு ஏற்பட்டால் இழப்பீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கழிவு நீர் அகற்றும் பணியின்போது தொழிலாளர்கள் உயிரிழந்தால் குறைந்தது ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி கழிவு நீர் அகற்றும்போது உயிரிழப்பு ஏற்பட்டால் உயர்த்தப்பட்ட இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

அதே சமயம் கழிவு நீர் அகற்றும்போது படுகாயமடைந்து நிரந்தர உடல் பாதிப்பு ஏற்பட்டால் ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இதர பாதிப்புக்கு ரூ.10 லட்சம் வரையிலும் இழப்பீடு வழங்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாக்கடை மற்றும் மனிதக் கழிவுகளை கையால் சுத்தம் செய்வதைமுற்றிலுமாக ஒழிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு 14 வழிகாட்டுதல் நெறிமுறைகளும் வெளியிட்டுள்ளது.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe