Advertisment

லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்!

டெல்லி மத்திய தரைவழி போக்குவரத்து துறை செயலாளருடனான நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த 8 நாட்களாக நடைபெற்று வந்த லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.

Advertisment

டீசல் விலை உயர்வு, மூன்றாம் நபர் காப்பீடு கட்டணம் உயர்வு, சுங்க கட்டணம் உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 8-வது நாளாக லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வருகிறார்கள்.

Advertisment

இந்த போராட்டத்தில் நாடு முழுவதும் 90 லட்சம் லாரிகள் பங்கேற்றுள்ளன. இதனால் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் சரக்குகள் போக்குவரத்து அடியோடு முடங்கியது. வட மாநிலங்களில் இருந்து சிமெண்டு, கட்டுமான பொருட்கள், கோழித்தீவன மூலப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தமிழகம் வருவது தடைப்பட்டது.

இதனால், தமிழகம் மற்றும் நாடு முழுவதும் பல ஆயிரம் கோடிக்கு மேல் சரக்குகள் தேக்கம் அடைந்தன. லாரி டிரைவர்கள், கிளீனர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், இதர பணியாளர்கள் என லட்சக்கணக்கானோர் வேலை இழந்தனர்.

மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி லாரி ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என பல தரப்பில் இருந்தும் கோரிக்கை எழுந்தது. இந்நிலையில், போக்குவரத்து அமைச்சக அதிகாரிகளுடன் இன்று நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது.

இதனை அடுத்து, ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டது. நள்ளிரவு முதல் லாரிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

lorry strike
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe