சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு முன்னாள் சிறப்பு அதிகாரி சிலைக்கடத்தல் வழக்குகள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கூடுதல் டிஜிபி அபய்குமாரி சிங்கிடம்ஒப்படைத்தார் பொன்.மாணிக்கவேல்.
கடந்த 2018- ஆம் ஆண்டு நவம்பர் 30- ஆம் தேதி ஓய்வுபெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்கவேலை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில், மேலும் ஒரு ஆண்டுக்கு சிறப்பு அதிகாரியாக நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/PON MANICKAVEL5.jpg)
இந்நிலையில் பொன். மாணிக்கவேலின் பதவிக்காலம் முடிந்த நிலையில், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜியாக டி.எஸ்.அன்பு நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு டிசம்பர் 3- ஆம் தேதி அன்று வெளியிட்டிருந்தது.
அதைத் தொடர்ந்து சிலைக்கடத்தல் வழக்கு ஆவணங்களை ஏடிஜிபியிடம் ஒப்படைக்க உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. ஆவணங்களை தராததால் பொன் மாணிக்கவேலுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டிருந்தது. இந்த நிலையில் கூடுதல் டிஜிபி அபய்குமாரி சிங்கிடம்சிலை கடத்தல் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் ஒப்படைத்துள்ளார் பொன்.மாணிக்கவேல் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us