Skip to main content

தொடங்கியது 5ம் கட்ட வாக்குப்பதிவு...

Published on 06/05/2019 | Edited on 06/05/2019

நாடாளுமன்றத்திற்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் 5ம் கட்ட வாக்குப்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
 
5th phase

இந்த 5ம் கட்ட வாக்குப்பதிவு மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம், மேற்குவங்கம், ஜம்மு காஷ்மீர், ஜார்கண்ட், பீகார், ராஜஸ்தான் ஆகிய 7 மாநிலங்களின் 51 தொகுதிகளில் நடைபெறுகிறது. இதில் 674 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 8.75 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். மொத்தம் 94 ஆயிரம் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

சோனியாகாந்தி போட்டியிடும், ரேபரேலி, ராகுல்காந்தியின் அமேதி, ராஜ்நாத் சிங் போட்டியிடும் லக்னோ ஆகிய தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்

Next Story

“பா.ஜ.க.வுக்கு தமிழ்நாட்டில் மிகுந்த எழுச்சி தெரிகிறது” - மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
 Central Minister Anurag Thakur  says BJP is seeing a lot of growth in Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24)தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இந்த நிலையில், மத்திய தகவல் ஒளிபரப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் டெல்லியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “மக்கள் வலுவான தலைமையை விரும்புகிறார்கள், கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா எவ்வாறு முன்னேறியுள்ளது என்பதை அவர்கள் பார்த்திருக்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளில் மோடியின் தலைமையில் நாடு எப்படி முன்னேறி உலக அளவில் பெயர் பெற்றுள்ளது. இப்போது, ​​மக்கள் அதன் தொடர்ச்சியை காண விரும்புகிறார்கள். மேலும், அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக வளர வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

தமிழகத்தில் மாற்றத்தின் கடலைப் பார்க்க முடிந்தது. பா.ஜ.க.வுக்கு தமிழ்நாட்டில் மிகுந்த எழுச்சி தெரிகிறது. தமிழகத்தில் பா.ஜ.க.வை மக்கள் நம்பிக்கை கதிராகப் பார்க்கிறார்கள். இந்த முறை தமிழகத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க வாக்குகளைப் பெறப் போகிறது என்று நான் நம்புகிறேன்” என்று கூறினார். 

Next Story

வாக்கு சதவீதம் சரிவு; சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி விளக்கம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Radhakrishnan explained decline in voter turnout

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24)தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இந்த நிலையில், தமிழ்நாட்டில் மொத்தம் 69.46% வாக்குகள் பதிவாகியுள்ளது என மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், தமிழ்நாட்டில் மொத்தம் 69.46 % வாக்குகள் பதிவாகியுள்ளது.  தமிழகத்தில் தேர்தல் முடிந்து விட்டதால் பறக்கும் படைகள் உள் மாவட்டத்தில் கலைக்கப்படும்.

அண்டை மாநிலங்களில் தேர்தல் நடைபெறுவதால் எல்லைகளில் மட்டும் சோதனை  நடைபெறும். தேர்தல் நடத்தை விதிகளில் எந்த மாற்றமும் கிடையாது. மேலும் வாக்கு சதவீதம் குறித்து காலை 11 மணியளவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். 2019 மக்களவை தேர்தலில் 72.44% வாக்குகள் பதிவான நிலையில் 2024 தேர்தலில் வாக்குப்பதிவு 3% சரிந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து, சென்னை மாவட்டத் தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள் வாக்களிப்பதில் சுணக்கம் காட்டியுள்ளனர். நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களில் 10ல் 4பேர் வாக்களிக்கத் தவறிவிட்டனர். தேர்தல் ஆணையம் முறையாக விழிப்புணர்வு ஏற்படுத்தியும் நகர்ப்புறங்களில் வாக்கு சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.