Advertisment

கம்பீரமாக மேல்கோட் பறக்க 12 அடி உயரம் கொண்ட லெனின் சிலை... சீதாராம் யெச்சூரி திறந்து வைத்தார்...

lenin

Advertisment

நெல்லையில் உடையார்பட்டி சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது, சிபிஎம்-இன் மாவட்ட அலுவலகம். அதன் முன்னே கம்பீரமாக மேல்கோட் பறக்க 12 அடி உயரம் கொண்ட லெனின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. கம்பீரமாக நிற்கும் இந்த சிலையை தமிழகத்தின் தலைசிறந்த சிற்பி டாக்டர் சந்துரு வடிவமைத்துள்ளார். அவருக்கு உதவியாக காத்தப்பன் உள்ளிட்டோர் தொடர்ச்சியாக செயல்பட்டுள்ளனர். இச்சிலையை திறப்பதற்கு சிபிஎம்-இன் தேசிய செயலாளர் சீதாராம் யெச்சூரி நெல்லைக்கு மதியமே வந்தார். மாலை ஐந்து மணியளவில் நடந்த சிலை திறப்பு விழாவில் சிபிஎம்-இன் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் பாஸ்கரன், மத்திய கமிட்டி உறுப்பினர் வாசுகி மற்றும் சம்பத் உட்பட பலர் முன்னிலை வகித்தனர்.

தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து சிபிஎம்-இன் தொண்டர்கள் மற்றும்நிர்வாகிகள் பெருமளவில் திரண்டு வந்திருந்தனர். மாலை ஆறு மணியளவில் லெனினின் மாபெரும் சிலையை சீதாராம் யெச்சூரி திறந்து வைத்தார். அப்போது திரண்டிருந்த தோழர்கள் கரவொலி எழுப்பினார்கள். நான்கு அடி உயரம்கொண்ட லெனின் சிலை பீடத்தில் லெனினின் மார்க்ஸிய சித்தாந்தம் பொறிக்கப்பட்டிருந்தது.

seetaram

Advertisment

சிலையைத் திறந்தபின் சீதாராம் யெச்சூரி உரையாற்றினார். அப்போது அவரின் உரைவீச்சில் மோடி அரசின் கொள்கை பற்றிய எதிர்ப்பு வெளிபட்டது.யெச்சூரி பேசியதாவது...

இன்றைக்கு எதிர்கட்சிகளெல்லாம் சேர்ந்து ஒரு ஒற்றை மனிதனை எதிர்பதற்காக கூடியுள்ளார்கள் என்கிறார் மோடி. அதன் அர்த்தம் அப்படியல்ல. அவர்களேல்லாம் இணைந்திருப்பது, தொழிலாளர் வர்க்கமும், விவசாய வர்க்கமும் இந்த நாட்டில் மோடிக்கு எதிராக இணைந்திருப்பதையே காட்டுகிறது. அதன் எதிரொலியாக விவசாய தொழிலாளர்களின் மிகப்பெரிய பேரணி மகாராஷ்ட்ரா, குஜராத், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஒன்றிணைந்து பேரணிகள் நடத்தியிருக்கிறார்கள். முதலாளித்துவத்தையும், ஏகாதிபத்தியத்தையும் ஒழிப்பதற்கு இதுபோன்ற தொழிலாளர் வர்க்கங்கள் ஒன்றிணைந்திருக்கின்றன. நெல்லையில் லெனின் சிலை ஏன் அமைந்திருக்கிறதென்றால், இங்குதான் சுதந்திர போராட்ட வீரர்களான வ.வு.சி.யும், பாரதியாரும் பிறந்தார்கள்.இவர்கள் சுதந்திரத்திற்காக போராடிய முன்னோடிகள், அதனால்தான் இங்கே நெல்லையில் லெனின் சிலை அமையப்பெற்றிருக்கிறது.

lenin

மேலும் மகாகவி பாரதியார் லெனினின் மார்க்ஸிய தத்துவத்தை பற்றி பாடலாகப் பாடியவர். வ.வு.சி., பாரதியார் ஆகியோர்களை வெள்ளை ஏகாதிபத்தியம் கைதுசெய்தபோது அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி முதன்முதலாக தொழிலாளர் வர்க்கமும், விவசாய வர்க்கத்தினரும் போராடினார்கள். மோடி அரசின் பதினொறு பணக்காரர்கள் வங்கியின் பணத்தை கடன் வாங்கி வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிவிட்டனர். அதிலொருவர் தன்னுடைய பாஸ்போர்ட்டை ஒப்படைத்துவிட்டு நான் இனி இந்திய குடிமகன் இல்லை என்று சொல்லிவிட்டார். வெளிநாட்டிற்கு தப்பிய அவர்மீது எந்தவிதமான கிரிமினல் நடவடிக்கையும் எடுக்கமுடியாது. இதுதான் தற்போதையநிலை. மகாபாரதத்தில் கௌரவர்கள் தரப்பில் இரண்டுபேரை சொல்லுவார்கள் அதேபோன்றுதான் இப்போது மோடி, அமித்ஷா என்கிறார்கள். இந்துத்துவா அமைப்பினருக்கு கௌரவர்கள் நூறு பேர்களின் பெயர்கள் தெரியுமா தெரியாது எனவே மதசார்பற்ற சக்திகள் ஒன்றிணைய வேண்டும். என்பதுதான் எங்களின் கொள்கை. தமிழ்நாட்டில் பாஜகவிற்கு துணை தேவைப்படுகிறது. எனவே அதற்கு துணையானவர்களையும் முறியடிக்கவேண்டும். தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் வேற்றுமையிலும் ஒற்றுமையைக்கொண்டிருக்கிறது. அவர்கள் சமூகநீதி கொள்கையை நிலைநாட்ட முற்படுகிறார்கள் என்று பேசினார்.

lenin statue Sitaram yechury Tirunelveli
இதையும் படியுங்கள்
Subscribe