/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/dinakaran ark.jpg)
ஆர்.கே.நகர் சென்ற அத்தொகுதியின் எம்.எல்.ஏவான டிடிவி.,தினகரனுக்கு எதிர்ப்பை தெரிவித்த சில பெண்கள் 20 ரூபாய் நோட்டுகளை காண்பித்து ஓட்டுக்கான பணம் எங்கே? என்று முழக்கம் எழுப்பியதால் சலசலப்பு ஏற்பட்டது.
நேதாஜி நகரில் உள்ள முருகன் கோவிலில் டிடிவி.தினகரன் இன்று வழிபாடு நடத்தினார். இதையறிந்து பெண்கள் சிலர் கோவிலுக்கு முன்பு திரண்டனர். இடைத்தேர்தலின் போது ஓட்டுக்கு பணம் கொடுப்பதற்காக வழங்கப்பட்ட டோக்கனாக கூறப்படும் 20 ரூபாய் நோட்டுகளை காண்பித்தபடி பெண்கள் முழக்கமிட்டனர். ஓட்டுக்காக கொடுப்பதாக கூறிய 10 ஆயிரம் எங்கே என்று கேட்டு முழக்கமிட்டனர். இதன் பின்னர் அங்கு வந்த போலீசார் பெண்களை சமாதானப்படுத்தினர்.
ஆனாலும் தினகரன் காரில் செல்லும்போது காரை மறித்து போராட்டம் நடத்துவது என முடிவு செய்தனர். இதனால் அவசர அவசரமாக தண்ணீர்பந்தலை திறந்துவைத்துவிட்டு மாற்றுப்பாதையில் காரில் சென்றார் தினகரன்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png) 
   Follow Us
 Follow Us