l murugan - Kushboo

Advertisment

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் டெல்லி சென்றுள்ளார். நேற்று அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் குஷ்பு பாஜகவில் சேர இருப்பதாக வெளியாகும் தகவல் குறித்த கேள்விக்கு பதில் அளித்தார்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு பாஜகவில் சேர இருப்பதாக சொல்வது உண்மையா? என்ற கேள்விக்கு, அப்படி எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை. நிறைய பிரபலங்கள் மாற்றுக் கட்சியில் இருந்து பாஜகவில் இணைந்து கொண்டுள்ளனர். யார் வந்தாலும் வரவேற்க பாஜக தயாராகவே இருக்கிறது. குஷ்பு பாஜகவுக்கு வர தயாராக இருந்தால் நாங்களும் வரவேற்க தயாராக இருக்கிறோம்.

பாஜக மீது குஷ்பு விமர்சனம் செய்திருக்கிறார். அப்படி விமர்சனம் செய்யும்போது பாஜகவும் பதில் விமர்சனம், கருத்துகள் தெரிவித்திருக்கிறது. இப்படி இருக்கும்போது அவர் பாஜகவுக்கு வருவது சரியாக இருக்குமா என்ற கேள்விக்கு, ஒரு கட்சியில் இருக்கும்போது இன்னொரு கட்சிக்கு எதிராக விமர்சனம் செய்வது, கருத்து சொல்வது வழக்கமான நடைமுறைதான் என்று கூறியுள்ளார்.